
2050 இல் 'பூஜ்ஜிய கார்பன்' இலக்கை அடைய அரசாங்கம் தீர்மானம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
2050 ஆம் ஆண்டளவில் 'பூஜ்ஜிய கார்பன்' (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பு என சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச இலத்திரனியல் கழிவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றிய அவர், நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் மின் மற்றும் இலத்திரனியல் (E-Waste) கழிவுகளை முகாமைத்துவம் செய்ய புதிய தேசியக் கொள்கை மற்றும் சட்ட ஏற்பாடுகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
அத்துடன், பொதுமக்கள் தங்களது பயன்பாட்டற்ற இலத்திரனியல் சாதனங்களைப் பாதுகாப்பாக அகற்றுவதற்கு, நாடு முழுவதும் உள்ள தொலைத்தொடர்பு சேவை மையங்கள் மற்றும் சிறப்புச் சேகரிப்பு மையங்கள் ஊடாக வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
தொல்பொருள் மற்றும் கலாச்சாரத்தைப் பேணித் திட்டங்களைச் செயல்படுத்த புதிய பொறிமுறை உருவாக்கம்!
அநுராதபுரம் புனித பூமியில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, பாரம்பரியங்களைப் பாதுகாத்து முறையான தீர்மானங்களை எடுப்பதற்காக புதிய ஜனாதிபதி ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல் எச்சரிக்கை: 1,45,000 முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு இழப்பு!
புவி வெப்பமயமாதல் மற்றும் பணியிடங்களில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக, 2040ஆம் ஆண்டிற்குள் இலங்கைக்குச் சுமார் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு உற்பத்தித்திறன் இழப்பு ஏற்படக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் விஜித் மலல்கொட நியமனம்!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் விஜித் மலல்கொட நியமனம்!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




