சுவிஸ்: 6°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

நேபாளத்தை புரட்டிப்போட்ட கனமழை, வெள்ளம்: அதிரவைத்த நிலச்சரிவுகளால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

VIGNESWARAN ABIRAMY•29 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
நேபாளத்தை புரட்டிப்போட்ட கனமழை, வெள்ளம்: அதிரவைத்த நிலச்சரிவுகளால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

நேபாளத்தை புரட்டிப்போட்ட கனமழை, வெள்ளம்: அதிரவைத்த நிலச்சரிவுகளால் இயல்பு வாழ்க்கை முடக்கம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நேபாளத்தில் தொடரும் கனமழை, நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நிலமை மேலும் தீவிரமடைந்துள்ளது.

கனமழை மற்றும் நிலச்சரிவுகளுக்குப் பலியாகியோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 14-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

காளிகண்டகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டுப் பல பகுதிகளில் மின்விநியோகம் முடங்கியுள்ளது.

மோசமான வானிலை மற்றும் வீதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புக் குழுவினர் பல இடங்களுக்கு நடந்து சென்றே மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வானிலை மோசமாக இருக்கும் என்பதால் ஆற்றங்கரையோர மக்களும், மலைப்பகுதி மக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஹார்முஸ் நீரிணையில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்!

ஹார்முஸ் நீரிணையில் இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் கடற்படை கண்ணிவெடிகளில் மோதியதால் வெடித்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) கடற்படை ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்துள்ளது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இஸ்ரேலிய அரசியலில் திருப்பம்: நேதன்யாகுவின் அழைப்பை ஏற்பாரா ராணுவ முன்னாள் தளபதி காடி ஐசென்கோட்?

இஸ்ரேல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் பெரும் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்த்தரப்பின் முக்கியத் தலைவரான காடி ஐசென்கோட்டின் ஆதரவைப் பெறப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பொருளாதார ஸ்திரத்தன்மையைக் குலைக்கச் சதி நடக்கிறது: பங்களாதேஷ் அரசு தீவிர எச்சரிக்கை!

பங்களாதேஷில் ஆடைத் தொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், இதன் பின்னணியில் நாட்டின் அமைதியைக் குலைக்கும் சதித்திட்டம் ஒன்று செயல்பட்டு வருவதாக அரசு தரப்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

23 பேருடன் சென்ற ஈரான் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்!

சோமாலியாவின் வடகிழக்குக் கடலோரப் பகுதியான பண்டார் பைலா மற்றும் ஹபுனா ஆகிய நகரங்களுக்கு இடையிலான கடல் எல்லைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த 'அஜினி' என்ற ஈரானிய மீன்பிடிப் படகையே 12 சோமாலியக் கடற்கொள்ளையர்கள் தாக்கித் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm