
23 பேருடன் சென்ற ஈரான் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சோமாலியாவின் வடகிழக்குக் கடலோரப் பகுதியான பண்டார் பைலா மற்றும் ஹபுனா ஆகிய நகரங்களுக்கு இடையிலான கடல் எல்லைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த 'அஜினி' என்ற ஈரானிய மீன்பிடிப் படகையே 12 சோமாலியக் கடற்கொள்ளையர்கள் தாக்கித் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்தக் கப்பலில் 21 ஈரானிய மீனவர்களும், 2 சோமாலியப் பாதுகாப்புப் பணியாளர்களும் அடங்கலாக மொத்தம் 23 பேர் பயணித்துள்ளனர்.
கடத்தப்பட்ட கடற்பகுதியில் உள்ளவர்களின் தற்போதைய நிலை மற்றும் பாதுகாப்பு குறித்த எந்தவொரு தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடல்சார் பாதுகாப்பு மையம் (MSCIO) இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், கடத்தப்பட்ட இந்தக் கப்பலை முதன்மைத் தளமாகக் (Mother Ship) கொண்டு வணிகக் கப்பல்கள் மீது கடற்கொள்ளையர்கள் மேலதிகத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என எச்சரித்துள்ளது.
இதனால் அப்பகுதியில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் தீவிரக் கண்காணிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இஸ்ரேலிய அரசியலில் திருப்பம்: நேதன்யாகுவின் அழைப்பை ஏற்பாரா ராணுவ முன்னாள் தளபதி காடி ஐசென்கோட்?
இஸ்ரேல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் பெரும் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்த்தரப்பின் முக்கியத் தலைவரான காடி ஐசென்கோட்டின் ஆதரவைப் பெறப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
பொருளாதார ஸ்திரத்தன்மையைக் குலைக்கச் சதி நடக்கிறது: பங்களாதேஷ் அரசு தீவிர எச்சரிக்கை!
பங்களாதேஷில் ஆடைத் தொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், இதன் பின்னணியில் நாட்டின் அமைதியைக் குலைக்கும் சதித்திட்டம் ஒன்று செயல்பட்டு வருவதாக அரசு தரப்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
மணிப்பூரில் கொடூரம்: காணாமல் போன 2 இளைஞர்களின் உடல்கள் சாக்குப்பையில் மீட்பு - வெடித்தது மக்கள் போராட்டம்!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி காணாமல் போன டி. சோங்லாய் மற்றும் பாவோகின்லால் ஹாங் சிங் ஆகிய இரு இளைஞர்களின் உடல்கள் சாக்குப்பையில் மீட்கப்பட்டதை அடுத்து, அங்கு மீண்டும் பெரும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது!
பைனான்ஸ் தளத்திலிருந்து பில்லியன் கணக்கில் வெளியேறிய நிதி!
கிரிப்டோகரன்சி துறையின் மிகப்பெரிய வர்த்தகத் தளமான பைனான்ஸில் ஏற்பட்ட பாதுகாப்புச் சிக்கல் மற்றும் ஹேக்கிங் அச்சுறுத்தல் காரணமாகப் பணப் பரிவர்த்தனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




