
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை குறித்த பிரத்யேக ஒளிப்படம்
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை – 4 மாடுகள் மீட்பு
யாழ்ப்பாணம் Osmania College அருகே இயங்கி வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் ஒன்றை பொலிஸார் இன்று முற்றுகையிட்டுள்ளனர்.
இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், இறைச்சியாக்குவதற்காக கட்டி வைக்கப்பட்டிருந்த நான்கு மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், சுமார் 58 கிலோகிராம் மாட்டிறைச்சியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 43 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட மாடுகள் மற்றும் கைப்பற்றப்பட்ட மாட்டிறைச்சி தொடர்பாகவும், மாடுகள் திருடப்பட்டவையா என்பது குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
கயல்
செய்தியாளர்அக்கினி செய்திகளின் சர்வதேச செய்தி நிருபர். ஐரோப்பிய நாடுகள் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கை மாணவர்களுக்குத் தென்கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு!
இலங்கை மாணவர்களுக்குத் தென்கொரியாவில் உயர்கல்வி கற்றல், தொழில் வாய்ப்புகளைப் பெறுதல் மற்றும் நீண்டகாலம் வசிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் புதிய உடன்படிக்கை ஒன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
புதுமாத்தளன் கடற்பரப்பில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணி தீவிரம்!
முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போயுள்ள மூன்று மீனவர்களையும் தேடி மீட்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கைக் கடற்படை மற்றும் வான்படைகள் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட LTTE முன்னாள் உறுப்பினர் கைது!
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம சந்தேகநபர் மரணம்: சுயாதீன விசாரணை நடத்தவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்!
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த 29 வயதுடைய இஷார ஹர்ஷ குமாரவின் மரணம் தொடர்பில் உடனடியாகவும் சுயாதீனமாகவும் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா சுட்டிக்காட்டினார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




