
இயற்கை இடர்பாடுகளிலிருந்து தேயிலைத் தோட்டங்களைப் பாதுகாக்க புதிய காப்பீடு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கைத் தேயிலைச் சாகுபடி மற்றும் தேயிலைக் கன்று வளர்ப்பைப் பாதுகாக்கும் வகையில் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையினால் புதிய சிறப்பு காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை மாற்றங்கள், வறட்சி, இயற்கை அனர்த்தங்கள் அத்துடன் பூச்சித் தாக்குதல்களால் தேயிலைத் தோட்டங்களுக்கும் தேயிலைக் கன்றுகளுக்கும் ஏற்படும் சேதங்களை எதிர்கொள்ளும் வகையில் இப்புதிய காப்பீட்டுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், பெரிய அளவிலான பயிர்ச்செய்கையாளர்கள் மற்றும் தேயிலைக் கன்று வளர்ப்பாளர்கள் தங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்குத் தகுந்த நிதிப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.
காலநிலை அச்சுறுத்தல்களிலிருந்து பெருந்தோட்டத் துறையைப் பாதுகாத்து, நாட்டின் தேயிலை உற்பத்தியை ஸ்திரப்படுத்தும் இந்தத் திட்டம் தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்பப் படிவங்களையும் மாவட்ட விவசாய காப்பீட்டுச் சபை அலுவலகங்கள் ஊடாகவோ அல்லது 1918 என்ற துரித சேவை இலக்கத்தைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை: ரகித ராஜபக்ஷவின் கணக்குகளை முடக்க உத்தரவு!
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டத்தை மீறும் பொலிஸாருக்குக் கடுமையான தண்டனை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் எச்சரிக்கை!
சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொள்ளும் எந்தவொரு பொலிஸ் அதிகாரியையும் பாதுகாக்கப் பொலிஸ் திணைக்களம் ஒருபோதும் செயற்படாது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் அறுதியிட்டுத் தெரிவித்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - டில்வின் சில்வா இடையே சந்திப்பு: இருதரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடல்!
இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவைச் சந்திக் கலந்துரையாடியுள்ளார்.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மீண்டும் பரவல்! 6 மாவட்டங்கள் பாதிப்பு!
இலங்கையின் கொழும்பு, கண்டி, களுத்துறை, புத்தளம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் பரவல் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




