சட்டத்தை மீறும் பொலிஸாருக்குக் கடுமையான தண்டனை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் எச்சரிக்கை!

சட்டத்தை மீறும் பொலிஸாருக்குக் கடுமையான தண்டனை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொள்ளும் எந்தவொரு பொலிஸ் அதிகாரியையும் பாதுகாக்கப் பொலிஸ் திணைக்களம் ஒருபோதும் செயற்படாது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் அறுதியிட்டுத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், தவறிழைக்கும் அதிகாரிகளுக்கு எதிராகச் சட்டரீதியாகவும் ஒழுக்காற்று ரீதியாகவும் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஹோமாகம பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் நேரடி வழிகாட்டலில் மேல் மாகாண தெற்குப் பிரிவின் விசேட குழு விசாரணை நடத்தி வருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக ஹோமாகம தலைமையகப் பொலிஸ் பரிசோதகர், குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, கொபெய்கனே பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பொதுமக்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசேட விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், திருகோணமலை பொலிஸ் காவலில் இருந்த மூன்று சந்தேகநபர்களுக்கு வெட்டுக்காயங்கள் ஏற்பட்டமை குறித்துப் பிரிவுப் பொறுப்பதிகாரியிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
நாளை முடங்கும் அரச பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள்? விரிவுரையாளர்கள் அதிரடி முடிவு!
நாட்டின் அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பு எதிர்கொள்ளும் தீவிர சவால்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் (FUTA) ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை: ரகித ராஜபக்ஷவின் கணக்குகளை முடக்க உத்தரவு!
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) நடவடிக்கை எடுத்துள்ளது.
இயற்கை இடர்பாடுகளிலிருந்து தேயிலைத் தோட்டங்களைப் பாதுகாக்க புதிய காப்பீடு!
இலங்கைத் தேயிலைச் சாகுபடி மற்றும் தேயிலைக் கன்று வளர்ப்பைப் பாதுகாக்கும் வகையில் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையினால் புதிய சிறப்பு காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - டில்வின் சில்வா இடையே சந்திப்பு: இருதரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடல்!
இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவைச் சந்திக் கலந்துரையாடியுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




