சுவிஸ்: 6°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்!

VIGNESWARAN ABIRAMY•9 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்!

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (09) பாராளுமன்றத்தில் முறைப்படி சமர்ப்பிக்கப்படவுள்ளது. 49 குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணை, நாட்டின் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (08) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பிரேரணிக்கான முதல் கையெழுத்தை சஜித் பிரேமதாச பதித்தார்; தொடர்ந்து எம்பிக்கள் பலர் இதில் கையெழுத்திட்டனர்.

பாராளுமன்ற நடைமுறைகளைக் கையாளும்போது சபாநாயகர் சார்புடனும், ஜனநாயகத்துக்கு முரணாகவும் செயற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய மக்கள் சக்தி முன்னர் சமர்ப்பித்த சிறப்புரிமைப் பிரச்சினைகள் மற்றும் பிரேரணைகளை உரிய காரணமின்றி நிராகரித்ததாகவும் எதிர்க்கட்சி தரப்பு குற்றம் சுமத்துகிறது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று அதிகாரப்பூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

'Gen Z' மற்றும் 'மிலேனியல்' தலைமுறையைக் கவராவிட்டால் வெற்றி சாத்தியமில்லை: ரணில் சுட்டிக்காட்டு!

தற்போதைய கட்சி அரசியலில் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றி இனிமேலும் முன்னோக்கிச் செல்ல முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

தொல்பொருள் மற்றும் கலாச்சாரத்தைப் பேணித் திட்டங்களைச் செயல்படுத்த புதிய பொறிமுறை உருவாக்கம்!

அநுராதபுரம் புனித பூமியில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, பாரம்பரியங்களைப் பாதுகாத்து முறையான தீர்மானங்களை எடுப்பதற்காக புதிய ஜனாதிபதி ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

புவி வெப்பமயமாதல் எச்சரிக்கை: 1,45,000 முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு இழப்பு!

புவி வெப்பமயமாதல் மற்றும் பணியிடங்களில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக, 2040ஆம் ஆண்டிற்குள் இலங்கைக்குச் சுமார் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு உற்பத்தித்திறன் இழப்பு ஏற்படக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் விஜித் மலல்கொட நியமனம்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm