சுவிஸ்: 17°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

ஞானசார தேரரை ஆஜர்படுத்த வேண்டிய அவசியமில்லை: நீதிமன்றம் அறிவிப்பு!

VIGNESWARAN ABIRAMY•22 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ஞானசார தேரரை ஆஜர்படுத்த வேண்டிய அவசியமில்லை: நீதிமன்றம் அறிவிப்பு!

ஞானசார தேரரை ஆஜர்படுத்த வேண்டிய அவசியமில்லை: நீதிமன்றம் அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நாளை (23) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட மாட்டார் எனப் புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட சிறைச்சாலை உத்தரவுகளுக்கு அமைவாக, காவி உடைகளுடன் அவர் நாளை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கர் கலாநிதி இத்தேபான தம்மாலங்கார தேரருக்கு, புத்தசாசன அமைச்சினால் இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சபையின் அநுநாயக்கர் பேராசிரியர் கொடபிடியே ராகுல தேரர் 'அத தெரண' ஊடகத்திற்குத் தெரிவித்தார்.

இது தொடர்பாகப் புத்தசாசனப் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்கவிடம் வினவியபோது, ஞானசார தேரரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும், அதன் காரணமாகவே மகாநாயக்க தேரருக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஹுங்கம மூவர் கொலை: பிரதான சந்தேகநபர் ‘அச்சினி’ டுபாயில் கைது!

ஹுங்கம பகுதியில் "கஜ்ஜா" என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான ‘அச்சினி’ என்ற அனோஷா லக்மாலி என்ற பெண் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மட்டக்களப்பில் சோகம்: குளியலறை வாளிக்குள் விழுந்து ஒரு வயதுக் குழந்தை பலி!

மட்டக்களப்பு - தன்னாமுனைப் பகுதியில் குளியலறையில் இருந்த நீர் வாளிக்குள் தவறி வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சோகச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய திறந்த பிடியாணை!

முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சீரற்ற வானிலை: ஆழ்கடலில் சிக்கிய இலங்கை மீனவர்களுக்கு இந்தியா அவசர அனுமதி!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல் சீற்றம் காரணமாக, ஆழ்கடலில் சிக்கிய இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகள் இந்தியக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm