சுவிஸ்: 8°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

1983 ஜூலைக் கலவரம் குறித்து விசாரிக்கத் தெரிவுக்குழு: இலங்கை அரசின் 51 உறுப்பினர்கள் யோசனை!

VIGNESWARAN ABIRAMY•9 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
1983 ஜூலைக் கலவரம் குறித்து விசாரிக்கத் தெரிவுக்குழு: இலங்கை அரசின் 51 உறுப்பினர்கள் யோசனை!

1983 ஜூலைக் கலவரம் குறித்து விசாரிக்கத் தெரிவுக்குழு: இலங்கை அரசின் 51 உறுப்பினர்கள் யோசனை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கையில் இடம்பெற்ற 1983 ஜூலைக் கலவரம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, அது குறித்த முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு வலியுறுத்தி ஆளுங்கட்சியின் 51 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியிடம் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை இனக்கலவரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த தனிநபர் பிரேரணையை இன்று வெள்ளிக்கிழமை (09) முன்வைத்தார்.அரசுச் செய்திகள்

இந்த தனிநபர் பிரேரணையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியின் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் ஜுலை இனக்கலவரத்துக்கு சிங்கள இனத்தை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டார்கள்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

'Gen Z' மற்றும் 'மிலேனியல்' தலைமுறையைக் கவராவிட்டால் வெற்றி சாத்தியமில்லை: ரணில் சுட்டிக்காட்டு!

தற்போதைய கட்சி அரசியலில் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றி இனிமேலும் முன்னோக்கிச் செல்ல முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

தொல்பொருள் மற்றும் கலாச்சாரத்தைப் பேணித் திட்டங்களைச் செயல்படுத்த புதிய பொறிமுறை உருவாக்கம்!

அநுராதபுரம் புனித பூமியில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, பாரம்பரியங்களைப் பாதுகாத்து முறையான தீர்மானங்களை எடுப்பதற்காக புதிய ஜனாதிபதி ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

புவி வெப்பமயமாதல் எச்சரிக்கை: 1,45,000 முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு இழப்பு!

புவி வெப்பமயமாதல் மற்றும் பணியிடங்களில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக, 2040ஆம் ஆண்டிற்குள் இலங்கைக்குச் சுமார் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு உற்பத்தித்திறன் இழப்பு ஏற்படக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் விஜித் மலல்கொட நியமனம்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm