சுவிஸ்: 6°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

காரைநகர் செல்ல வந்த 15 வயதுச் சிறுமிகளுக்கு அதிர்ச்சி: ஏமாற்றி அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்ற ஆட்டோ சாரதி கைது!

VIGNESWARAN ABIRAMY•23 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
   காரைநகர் செல்ல வந்த 15 வயதுச் சிறுமிகளுக்கு அதிர்ச்சி: ஏமாற்றி அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்ற ஆட்டோ சாரதி கைது!

காரைநகர் செல்ல வந்த 15 வயதுச் சிறுமிகளுக்கு அதிர்ச்சி: ஏமாற்றி அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்ற ஆட்டோ சாரதி கைது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

கிளிநொச்சியிலிருந்து காரைநகர் பகுதிக்குச் செல்ல வந்த 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை ஏமாற்றி அழைத்துச் சென்று, தவறாக நடக்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ் முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவர் பொலிஸாரால் நேற்று (22.09.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய இரு சிறுமிகள் காரைநகருக்குச் செல்வதற்காகப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, அவர்களைத் தனது முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற சாரதி, காரைநகருக்கு அழைத்துச் செல்லாமல் மாதகல் பகுதிக்கு ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு வைத்து அச்சிறுமிகளிடம் தவறான முறையில் நடந்துகொள்ள முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகள் கூச்சலிட்டதை அடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸாரின் தலையீட்டால் சாரதி மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், கைது செய்யப்பட்ட சாரதியிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

அரசாங்கத்தின் மக்கள் விரோத போக்கிற்கு எதிராக வெள்ளிக்கிழமை கொழும்பில் பிரம்மாண்ட போராட்டம்: பிரியந்த பத்பேரிய அறிவிப்பு!

அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகள், அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பொருளாதாரச் சீரழிவுகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை கொழும்பில் அனைத்து சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பிரம்மாண்ட போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் செயலாளரும் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான பிரியந்த பத்பேரிய தெரிவித்தார்.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

புசல்லாவ தொரகல பகுதியில் சோகம்: பெண் வெட்டிக்கொலை; வாலிபர் தூக்கில் சடலமாக மீட்பு!

புசல்லாவ பொலிஸ் பிரிவில் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆழ்கடலில் பரபரப்பு: போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகு சுற்றிவளைப்பு!

ஆழ்கடல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

போதைப்பொருள் குற்றங்களில் 208 பொலிஸார் கைது, 1,500 அதிகாரிகள் சஸ்பெண்ட்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அதிரடித் தகவல்!

போதைப்பொருள் தடுப்பு மற்றும் பொலிஸ் துறைக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm