"உண்மையான பொலிஸ் வந்துவிட்டது!" - கைது நடவடிக்கைகளால் திணறும் திருடர்கள் குறித்து ஜனாதிபதி அநுர அதிரடி!

"உண்மையான பொலிஸ் வந்துவிட்டது!" - கைது நடவடிக்கைகளால் திணறும் திருடர்கள் குறித்து ஜனாதிபதி அநுர அதிரடி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
உண்மையான பொலிஸ் வந்து விட்டதால் திருடர்கள் தற்போது திணறுகிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் மோசடி தொடர்பான கோப்புக்கள் எங்கே என்றார்கள். ஆனால் தற்போது கைதுகளை தொடர்ந்து திணறுகிறார்கள். என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருநாகல்-நிகவெரட்டிய பகுதியில் நேற்றையதினம் (11) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
சட்டத்தின் முன் அனைவரும் சமம், எவருக்கும் சட்டத்தில் சிறப்பு சலுகை வழங்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.சட்டத்தை அனைவருக்கும் பொதுவாக அமுல்படுத்தும் போது கடந்த காலங்களில் சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட்டவர்கள் இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படுகிறார்கள். சட்டத்தின் ஆட்சிக்கு எதிராகவுள்ளார்கள். என தெரிவித்தார் .

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
'Gen Z' மற்றும் 'மிலேனியல்' தலைமுறையைக் கவராவிட்டால் வெற்றி சாத்தியமில்லை: ரணில் சுட்டிக்காட்டு!
தற்போதைய கட்சி அரசியலில் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றி இனிமேலும் முன்னோக்கிச் செல்ல முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் மற்றும் கலாச்சாரத்தைப் பேணித் திட்டங்களைச் செயல்படுத்த புதிய பொறிமுறை உருவாக்கம்!
அநுராதபுரம் புனித பூமியில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, பாரம்பரியங்களைப் பாதுகாத்து முறையான தீர்மானங்களை எடுப்பதற்காக புதிய ஜனாதிபதி ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல் எச்சரிக்கை: 1,45,000 முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு இழப்பு!
புவி வெப்பமயமாதல் மற்றும் பணியிடங்களில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக, 2040ஆம் ஆண்டிற்குள் இலங்கைக்குச் சுமார் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு உற்பத்தித்திறன் இழப்பு ஏற்படக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் விஜித் மலல்கொட நியமனம்!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




