சுவிஸ்: 6°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இன்று முதல் குறிப்பிட்ட முக்கிய சேவைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு!

VIGNESWARAN ABIRAMY•1 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இன்று முதல் குறிப்பிட்ட முக்கிய சேவைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு!

இன்று முதல் குறிப்பிட்ட முக்கிய சேவைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கையில் குறிப்பிட்ட சில செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு, செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான TIN (Taxpayer Identification Number) சமர்ப்பிப்பது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் புதிய கணக்குகளைத் திறத்தல், கட்டிட வரைபடங்களுக்கான அனுமதியைப் பெறுதல், மோட்டார் வாகனங்களைப் பதிவுசெய்தல் மற்றும் வாகன உரிமங்களைப் புதுப்பித்தல் ஆகிய சந்தர்ப்பங்களில் TIN இலக்கத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.  

மேலும், காணி அல்லது காணி உரிமைகளைப் பதிவுசெய்தல், வணிக நிறுவனங்களைப் பதிவுசெய்தல், இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டைகளைப் (Credit Card) பெற்றுக்கொள்ளுதல் ஆகிய 8 முக்கிய சேவைகளுக்கும் இந்த TIN இலக்கம் அவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

குறிப்பிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்னர், சமர்ப்பிக்கப்படும் TIN இலக்கம் செல்லுபடியானதுதானா என்பதைப் பொறுப்பான அதிகாரிகள் கட்டாயம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.  

இதுவரை TIN இலக்கத்தைப் பெறாத நபர்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ e-Services இணையத்தள வாயிலாக உடனடியாகப் பதிவுசெய்து கொள்ள முடியும். அத்துடன், தன்னிடம் உள்ள TIN இலக்கம் செல்லுபடியானதா என்பதை அதே இணையத்தளத்தின் மூலம் பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.  

இணையவழி சரிபார்ப்பின் போது, நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் TIN இலக்கம் தெளிவாகக் காட்டப்பட்டுள்ள அச்சிடப்பட்ட பிரதியை (Printout), உத்தியோகபூர்வ TIN சான்றிதழுக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியும் என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கையின் வரி நிலுவை 2.1 டிரில்லியனாக அதிகரிப்பு: IMF வெளிப்படுத்தல்!

இலங்கையின் வரி நிலுவைத்தொகை பாரியளவில் அதிகரித்து, தோராயமாக 2.1 டிரில்லியன் ரூபாவை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள புதிய தொழில்நுட்ப உதவி அறிக்கை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

1 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

அர்னாப் புயல் பேரழிவு: 5,800 குடும்பங்கள் பாதிப்பு – மீட்புப் பணிகள் தீவிரமடைவு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் 'அர்னாப்' புயல் தாக்கம் காரணமாக இதுவரையில் 5,800-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 356 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

1 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

59.6 மில்லியன் ரூபாய் நிதி மோசடி – கொழும்பில் தனியார் நிறுவன ஊழியர் கைது!

இலங்கையில் 59.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 30 வயதுடைய தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

இலங்கையின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவை வருவாய் 15.5 சதவீதம் சரிவு!

இலங்கையின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செயல்முறை அவுட்சோர்சிங் எனப்படும் IT/BPO சேவைகள் மூலம் கிடைக்கும் வருவாய், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 15.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm