சுவிஸ்: 6°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

ஏ.ஐ நிறுவன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஆதரவு உறுதி!

VIGNESWARAN ABIRAMY•29 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ஏ.ஐ நிறுவன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஆதரவு உறுதி!

ஏ.ஐ நிறுவன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஆதரவு உறுதி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி டாரியோ அமோடியை இரவு விருந்தில் சந்திக்க உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கத் தாம் தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலினாய்ஸில் நடைபெற்ற ‘Presidents Cup’ கோல்ப் தொடரின்போது பொக்ஸ் நியூஸூக்கு வழங்கிய நேர்காணலில் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது அல்லது அதன் வேகத்தைக் குறைப்பது, சீனா அமெரிக்காவை முந்திச் செல்ல வழிவகுக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் சீனாவை விட சுமார் ஒன்றரை ஆண்டுகள் முன்னிலையில் உள்ளோம். ட்ரில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்பிலான உட்கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறோம். இந்த முன்னிலையை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?” என ட்ரம்ப் கேள்வியெழுப்பியுள்ளார்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஹார்முஸ் நீரிணையில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்!

ஹார்முஸ் நீரிணையில் இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் கடற்படை கண்ணிவெடிகளில் மோதியதால் வெடித்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) கடற்படை ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்துள்ளது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இஸ்ரேலிய அரசியலில் திருப்பம்: நேதன்யாகுவின் அழைப்பை ஏற்பாரா ராணுவ முன்னாள் தளபதி காடி ஐசென்கோட்?

இஸ்ரேல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் பெரும் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்த்தரப்பின் முக்கியத் தலைவரான காடி ஐசென்கோட்டின் ஆதரவைப் பெறப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பொருளாதார ஸ்திரத்தன்மையைக் குலைக்கச் சதி நடக்கிறது: பங்களாதேஷ் அரசு தீவிர எச்சரிக்கை!

பங்களாதேஷில் ஆடைத் தொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், இதன் பின்னணியில் நாட்டின் அமைதியைக் குலைக்கும் சதித்திட்டம் ஒன்று செயல்பட்டு வருவதாக அரசு தரப்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

23 பேருடன் சென்ற ஈரான் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்!

சோமாலியாவின் வடகிழக்குக் கடலோரப் பகுதியான பண்டார் பைலா மற்றும் ஹபுனா ஆகிய நகரங்களுக்கு இடையிலான கடல் எல்லைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த 'அஜினி' என்ற ஈரானிய மீன்பிடிப் படகையே 12 சோமாலியக் கடற்கொள்ளையர்கள் தாக்கித் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm