வடக்கு கென்யாவில் இடம்பெற்ற பயங்கர ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
வடக்கு கென்யாவில் அமைந்துள்ள மார்சாபிட் (Marsabit) பகுதியில் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று, எதிர்பாராதவிதமாகத் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்தச் சோகமான சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.








