டி20-யில் 200 வெற்றிகளை ருசித்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையைப் படைத்தது இந்தியா!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. உலக கிரிக்கெட் அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் இந்திய அணி, சர்வதேச டி20 போட்டிகளில் தனது 200-வது வெற்றியைப் பதிவு செய்து, இந்த மைல்கல்லை எட்டிய உலகின் முதல் அணி என்ற மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது.












