சுவிஸ்: 13°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

செம்மணி விவகாரத்தில் சர்வதேச விசாரணை தேவை: குரல் கொடுக்கும் பின்லாந்து எம்பிக்கள்!

VIGNESWARAN ABIRAMY•15 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
செம்மணி விவகாரத்தில் சர்வதேச விசாரணை தேவை: குரல் கொடுக்கும் பின்லாந்து எம்பிக்கள்!

செம்மணி விவகாரத்தில் சர்வதேச விசாரணை தேவை: குரல் கொடுக்கும் பின்லாந்து எம்பிக்கள்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

செம்மணிப் புதைகுழி விவகாரம் தொடர்பாக சர்வதேச அளவிலான சுயாதீன விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்று பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்களான இங்கா ஹோப்சு மற்றும் ஈவா பியூடெட் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்றச்சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க, பின்லாந்துக்கு விஜயம் செய்து புலம்பெயர் இலங்கையளர்களை சந்தித்திருந்தார். இந்நிலையில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் எழுத்துமூலமாக சமர்ப்பிக்கப்பட்ட கேள்வியொன்றில் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தலை செய்துள்ளனர். 

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கேள்வியில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் தகவல்களின்படி, கடந்த ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் செம்மணிப் புதைகுழியிலிருந்து 580க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கை ஊடாக பாகிஸ்தான் பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்த பிரம்மாண்ட மோசடி அம்பலம்!

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை இடைத்தங்கப் புள்ளியாகப் பயன்படுத்தி, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பொருட்களை போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்த சர்வதேச கடத்தல் கும்பலின் பிரம்மாண்ட மோசடியை இந்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (DRI) அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

15 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாடு முழுவதும் இன்ஃபுளுவென்சா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு!

நாடு முழுவதும் பருவகாலக் காய்ச்சலான இன்ஃபுளுவென்சா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

15 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த புதிய பாதை: 2030 டிஜிட்டல் இலக்குகளை அறிவித்தார் பிரதமர்!

வருகின்ற 2030ஆம் ஆண்டிற்குள் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை பிரம்மாண்ட இலக்குகளை நோக்கி நகர்த்துவதற்கான முக்கிய திட்டங்களையும் பாதையையும் பிரதமர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

15 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் சமூக ஊடகப் போலிப் பதிவுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

இலங்கையில் சமூக ஊடகங்களில் வெளியாகும் போலியான மற்றும் உறுதிப்படுத்தப்படாத பதிவுகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

15 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm