‘அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்’: ஜனாதிபதியிடம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை அவசர கோரிக்கை!

‘அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்’: ஜனாதிபதியிடம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை அவசர கோரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி அவரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை அரசாங்கத்திற்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையின் பிரதிநிதிகள் அவசர ஊடகவியலாளர் சந்திப்ப ஒன்றை நடத்தித் தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பேரவை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அனோஜன் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சூழல் மற்றும் அவரது தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் ஜனாதிபதி அவர்கள் தனது விசேட அதிகாரத்தைப் பயன்படுத்தி அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முன்வர வேண்டும்.
மேலும், இக்கோரிக்கை தொடர்பான உத்தியோகபூர்வ மகஜர் விரைவில் ஜனாதிபதி செயலகத்திலும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களிடமும் கையளிக்கப்படவுள்ளதாகத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை தெரிவித்துள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
மத்திய மாகாணத்தில் 'தூதர்களுடன் ஒரு மாலை' கூட்டம்: சுற்றுலா, விவசாயத் துறை வளர்ச்சிக்கு புதிய திட்டம்!
தென்கிழக்கு ஆசியா நாட்திய மாகாணத்தில் சுற்றுலா, விவசாயம் மற்றும் சிறு வணிகத் துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதையும், மாகாணத்தில் உள்ள தொழில்முனைவோருக்கான சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ‘தூதர்களுடன் ஒரு மாலை’ என்ற தூதரகக் கூட்டத்தின் தொடக்க அமர்வு, (30) அன்று மத்திய மாகாண சபை அரங்கில் நடைபெற்றது.
எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!
எந்தவொரு நாட்டுத் தலைவரும் வரி செலுத்தாத வகையில், தற்போதைய நாட்டுத் தலைவர் மக்கள் மீது வரிகளைச் சுமத்தி பெருமிதம் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே சிகரெட் விலை மிக அதிகம் உள்ள நாடு இலங்கை! - ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் ஆய்வில் அதிர்ச்சி!
மக்களின் கொள்வனவு திறன் சமநிலை அடிப்படையில் கணக்கிடும்போது, உலகிலேயே மிக அதிக விலையுயர்ந்த சிகரெட்டுகள் இலங்கையிலேயே விற்பனை செய்யப்படுவதாக ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் புதிய மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பல்லேகலை தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: தப்பிச் செல்ல முயன்ற கைதி பலி!
கண்டி - கலகெதர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




