பல்லேகலை தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: தப்பிச் செல்ல முயன்ற கைதி பலி!

பல்லேகலை தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: தப்பிச் செல்ல முயன்ற கைதி பலி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
கண்டி - கலகெதர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பள்ளேதன்ன, குறித்த கைதி சிறை அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றபோதே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
7 கிராம் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, சுமார் ஒரு வார காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 6 மாதங்களுக்கு முன்பே திருமணமான குறித்த நபரின் மனைவி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்ற சோகமான தகவலும் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உலகிலேயே சிகரெட் விலை மிக அதிகம் உள்ள நாடு இலங்கை! - ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் ஆய்வில் அதிர்ச்சி!
மக்களின் கொள்வனவு திறன் சமநிலை அடிப்படையில் கணக்கிடும்போது, உலகிலேயே மிக அதிக விலையுயர்ந்த சிகரெட்டுகள் இலங்கையிலேயே விற்பனை செய்யப்படுவதாக ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் புதிய மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
நிதி அமைச்சின் அதிரடி நடவடிக்கை: 33 அரசு நிறுவனங்களைக் கலைக்கும் பணிகள் ஆரம்பம்!
தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைக் கலைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது!
கட்டுநாயக்கவில் பரபரப்பு: புகைமூட்டம் காரணமாக ஸ்ரீலங்கன் விமானம் அவசரத் தரையிறக்கம்!
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் திடீரெனப் புகைமூட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று இரவு அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ அரங்கு கதிரைகள் கொள்வனவு விவகாரம்: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் முன்னாள் அதிகாரி!
இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால், இன்று முற்பகல் 9.45 மணியளவில் இந்த அதிரடிக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




