பிரதான 5 வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்: சுகாதார அமைச்சர் கடிதங்களை வழங்கினார்

பிரதான 5 வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்: சுகாதார அமைச்சர் கடிதங்களை வழங்கினார் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
நாட்டின் பிரதான ஐந்து வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைய இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் நேரில் வழங்கி வைத்துள்ளார்.
இதற்கமைய, நாட்டின் பிரதான நான்கு போதனா வைத்தியசாலைகளுக்கும் மற்றும் ரிட்ஜ்வே ஆரியா சிறுவர் வைத்தியசாலைக்கும் புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:
களுபோவில போதனா வைத்தியசாலை: வைத்தியர் டபிள்யூ.எம்.யு.எஸ். விஜேமான்ன
ராகம போதனா வைத்தியசாலை: வைத்தியர் டி.ஏ.கே. பெரேரா
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை: வைத்தியர் ஜி. சுகுணன்
பேராதனை போதனா வைத்தியசாலை: வைத்தியர் டபிள்யூ.எம்.சி.எம். விஜேசிங்க
ரிட்ஜ்வே ஆரியா சிறுவர் வைத்தியசாலை: வைத்தியர் டபிள்யூ.ஏ.பி.பி. ரத்னசேகர
வைத்தியசாலைகளின் சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த அவசர மற்றும் அவசியமான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
பாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்: தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டிற்கான பிரதான வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் மேலதிக வாக்காளர் பட்டியல்களுக்கு அமைய, தேர்தல் தொகுதிகளுக்கான வாக்காளர் எண்ணிக்கையையும், மாவட்ட ரீதியிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
களனிப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தீ விபத்து : உடமைகள் நாசம்!
களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி அறையொன்றில் இன்று முற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பத் மனம்பேரி வழக்கு: தீர்ப்பு அறிவிப்பு நவம்பர் 13 வரை ஒத்திவைப்பு!
முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மனம்பேரி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கறுப்பு ஜூலை குறித்து ஆய்வு செய்ய விசேட பாராளுமன்றக் குழு: பாராளுமன்றத்தில் யோசனை
1983 கறுப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விசேட பாராளுமன்றக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரும் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




