
பாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்: தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
2026 ஆம் ஆண்டிற்கான பிரதான வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் மேலதிக வாக்காளர் பட்டியல்களுக்கு அமைய, தேர்தல் தொகுதிகளுக்கான வாக்காளர் எண்ணிக்கையையும், மாவட்ட ரீதியிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான பிரதான வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் 2026 (1) மேலதிக வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 98 ஆவது உறுப்புரையின் (8) ஆம் உட்பிரிவின் விதிகளுக்கு அமைவாக, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான 2511/02 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை முந்தைய 18-லிருந்து 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில், பதுளை மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை முந்தைய 9-லிருந்து 8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
களனிப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தீ விபத்து : உடமைகள் நாசம்!
களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி அறையொன்றில் இன்று முற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பத் மனம்பேரி வழக்கு: தீர்ப்பு அறிவிப்பு நவம்பர் 13 வரை ஒத்திவைப்பு!
முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மனம்பேரி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பிரதான 5 வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்: சுகாதார அமைச்சர் கடிதங்களை வழங்கினார்
நாட்டின் பிரதான ஐந்து வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
கறுப்பு ஜூலை குறித்து ஆய்வு செய்ய விசேட பாராளுமன்றக் குழு: பாராளுமன்றத்தில் யோசனை
1983 கறுப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விசேட பாராளுமன்றக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரும் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




