
இன்று பிற்பகல் பலத்த மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா, தென், வடமேல் மற்றும் வடமத்திய ஆகிய மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனத் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் அடர்ந்த பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் மற்றும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கையின் வரி நிலுவை 2.1 டிரில்லியனாக அதிகரிப்பு: IMF வெளிப்படுத்தல்!
இலங்கையின் வரி நிலுவைத்தொகை பாரியளவில் அதிகரித்து, தோராயமாக 2.1 டிரில்லியன் ரூபாவை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள புதிய தொழில்நுட்ப உதவி அறிக்கை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அர்னாப் புயல் பேரழிவு: 5,800 குடும்பங்கள் பாதிப்பு – மீட்புப் பணிகள் தீவிரமடைவு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் 'அர்னாப்' புயல் தாக்கம் காரணமாக இதுவரையில் 5,800-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 356 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் குறிப்பிட்ட முக்கிய சேவைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு!
இலங்கையில் குறிப்பிட்ட சில செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு, செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான TIN (Taxpayer Identification Number) சமர்ப்பிப்பது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
59.6 மில்லியன் ரூபாய் நிதி மோசடி – கொழும்பில் தனியார் நிறுவன ஊழியர் கைது!
இலங்கையில் 59.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 30 வயதுடைய தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




