சுவிஸ்: 7°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

புறக்கோட்டையில் நுகர்வோர் அதிகாரசபை அதிரடி: 801 பிளாஸ்டிக் போத்தல்கள் கைப்பற்றல்!

VIGNESWARAN ABIRAMY•30 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
புறக்கோட்டையில் நுகர்வோர் அதிகாரசபை அதிரடி: 801 பிளாஸ்டிக் போத்தல்கள் கைப்பற்றல்!

புறக்கோட்டையில் நுகர்வோர் அதிகாரசபை அதிரடி: 801 பிளாஸ்டிக் போத்தல்கள் கைப்பற்றல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

கொழும்பு - புறக்கோட்டைப் பகுதியில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்யும் கடைகளைக் இலக்கு வைத்து நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது, உரிய தரநிலைகளைப் பின்பற்றாத 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட போத்தல்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகள் நிறைவடைந்ததும், சம்பந்தப்பட்ட வியாபார உரிமையாளர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.  

மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களுக்கு SLS 1616 தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உள்ளூரில் உற்பத்தியாகும் போத்தல்களில் இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) 'SLS' முத்திரை பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இறக்குமதி செய்யப்படும் போத்தல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

பொதுமக்கள் பிளாஸ்டிக் போத்தல்களைக் கொள்முதல் செய்யும்போது உரிய தரச்சான்றுகளை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், சந்தை முறைகேடுகள் குறித்து 1977 என்ற அவசர இலக்கத்திற்குத் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

மத்திய மாகாணத்தில் 'தூதர்களுடன் ஒரு மாலை' கூட்டம்: சுற்றுலா, விவசாயத் துறை வளர்ச்சிக்கு புதிய திட்டம்!

தென்கிழக்கு ஆசியா நாட்திய மாகாணத்தில் சுற்றுலா, விவசாயம் மற்றும் சிறு வணிகத் துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதையும், மாகாணத்தில் உள்ள தொழில்முனைவோருக்கான சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ‘தூதர்களுடன் ஒரு மாலை’ என்ற தூதரகக் கூட்டத்தின் தொடக்க அமர்வு, (30) அன்று மத்திய மாகாண சபை அரங்கில் நடைபெற்றது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

எந்தவொரு நாட்டுத் தலைவரும் வரி செலுத்தாத வகையில், தற்போதைய நாட்டுத் தலைவர் மக்கள் மீது வரிகளைச் சுமத்தி பெருமிதம் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

உலகிலேயே சிகரெட் விலை மிக அதிகம் உள்ள நாடு இலங்கை! - ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் ஆய்வில் அதிர்ச்சி!

மக்களின் கொள்வனவு திறன் சமநிலை அடிப்படையில் கணக்கிடும்போது, உலகிலேயே மிக அதிக விலையுயர்ந்த சிகரெட்டுகள் இலங்கையிலேயே விற்பனை செய்யப்படுவதாக ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் புதிய மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பல்லேகலை தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: தப்பிச் செல்ல முயன்ற கைதி பலி!

கண்டி - கலகெதர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm