சுவிஸ்: 6°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

திலீபன் சிலை அகற்றம்: அம்பாறை பகுதியில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்!

VIGNESWARAN ABIRAMY•29 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
திலீபன் சிலை அகற்றம்: அம்பாறை பகுதியில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்!

திலீபன் சிலை அகற்றம்: அம்பாறை பகுதியில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை பலவந்தமாக அகற்றப்பட்டமையைக் கண்டித்து, அம்பாறை - தம்பிலுவில் மத்திய சந்தை பகுதியில் பேரெழுச்சியோடு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினரால் இதன்போது வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையில், கடந்த பல தசாப்தங்களாகத் தமிழ் மக்கள் சந்தித்து வரும் தொடர் அநீதிகளின் ஒரு அங்கமாகவே இச்சம்பவம் பார்க்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்ட சொந்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மைக்கான நீதியைத் தேடி பல ஆண்டுகளாக வீதிகளில் இறங்கிப் போராடி வரும் தமக்கு நீதி வழங்கத் தவறிய இலங்கை அரசும் பொலிஸாரும், தற்போது புனிதமான நினைவேந்தல் உரிமைகளையும் பறிக்கத் துணிந்துள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நல்லூர் மண்ணில் பலவந்தமாக அகற்றப்பட்ட தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவச் சிலையை, எவ்வித நிபந்தனையுமின்றி, பொலிஸாரின் தலையீடுகளின்றி உடனடியாக மீண்டும் அதே இடத்தில் மீள நிறுவ வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மக்கள் தமது வரலாற்றையும், இன விடுதலைக்காகத் தம் உயிர்களைத் தியாகம் செய்தவர்களையும் நினைவுகூரும் ஜனநாயக உரிமையில் பாதுகாப்புத் தரப்பினர் தலையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், நினைவேந்தல் அடையாளங்களை அழிப்பதன் மூலமும் அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலமும் மக்களின் நீதிக்கான குரலை முடக்கிவிட முடியாது எனவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

மத்திய மாகாணத்தில் 'தூதர்களுடன் ஒரு மாலை' கூட்டம்: சுற்றுலா, விவசாயத் துறை வளர்ச்சிக்கு புதிய திட்டம்!

தென்கிழக்கு ஆசியா நாட்திய மாகாணத்தில் சுற்றுலா, விவசாயம் மற்றும் சிறு வணிகத் துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதையும், மாகாணத்தில் உள்ள தொழில்முனைவோருக்கான சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ‘தூதர்களுடன் ஒரு மாலை’ என்ற தூதரகக் கூட்டத்தின் தொடக்க அமர்வு, (30) அன்று மத்திய மாகாண சபை அரங்கில் நடைபெற்றது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

எந்தவொரு நாட்டுத் தலைவரும் வரி செலுத்தாத வகையில், தற்போதைய நாட்டுத் தலைவர் மக்கள் மீது வரிகளைச் சுமத்தி பெருமிதம் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

உலகிலேயே சிகரெட் விலை மிக அதிகம் உள்ள நாடு இலங்கை! - ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் ஆய்வில் அதிர்ச்சி!

மக்களின் கொள்வனவு திறன் சமநிலை அடிப்படையில் கணக்கிடும்போது, உலகிலேயே மிக அதிக விலையுயர்ந்த சிகரெட்டுகள் இலங்கையிலேயே விற்பனை செய்யப்படுவதாக ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் புதிய மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பல்லேகலை தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: தப்பிச் செல்ல முயன்ற கைதி பலி!

கண்டி - கலகெதர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm