
அனுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அனுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மைச் செயலாளர் (அபிவிருத்தி ஒத்துழைப்பு, ஊடகம், தகவல் மற்றும் கலாசார அலுவல்கள்) ரோஷினி தொம்சன் (Roshini Thomson) ஆகியோரின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியை தரிசிக்க வருகை தந்த வேளையில், புனித நகர அபிவிருத்தி திட்டத்திற்கு உதவிகளை வழங்க இணக்கம் தெரிவித்திருந்தார். அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் இணைந்து அனுராதபுரம் புனித நகரத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேசிய பெளதீக திட்டமிடல் திணைக்களம் இணைந்து தயாரித்துள்ள திட்ட வரைவு யோசனை இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அந்த யோசனை தொடர்பாக இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அண்மையில் அனுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக மகா சங்கத்தினர் மற்றும் அது தொடர்பான அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தியதுடன், குறித்த திட்டத்தை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.
அனுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு 7.7 பில்லியன் ரூபா செலவாகும் என தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதிப் பங்களிப்பை இந்திய அரசாங்கம் வழங்கும் என்பதுடன், இவ்வருடம் நிறைவடைவதற்கு முன்னர் ஆரம்பிக்க இத்திட்டத்தை எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் கீழ் அனுராதபுரம் புனித நகரத்தின் புராதன மற்றும் சமய பின்னணியை பாதுகாத்து, நுழை வாயில்களை புனரமைக்கவும், கழிவுகளை முறைப்படி அகற்றுவதற்கும். சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும், சிதைவடைந்துள்ள அனைத்து இடங்களையும் மீண்டும் புனரமைப்பதுடன் இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாம் செயலாளர் (DC) ரம்யா சி. எஸ். (Ramya C. S.), தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.டி.எச். ருசிர வித்தான, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் டி.எம்.டி.எஸ். திசாநாயக்க, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சந்திரிக்கா சேனநாயக்க உள்ளிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
பாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்: தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டிற்கான பிரதான வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் மேலதிக வாக்காளர் பட்டியல்களுக்கு அமைய, தேர்தல் தொகுதிகளுக்கான வாக்காளர் எண்ணிக்கையையும், மாவட்ட ரீதியிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
களனிப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தீ விபத்து : உடமைகள் நாசம்!
களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி அறையொன்றில் இன்று முற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பத் மனம்பேரி வழக்கு: தீர்ப்பு அறிவிப்பு நவம்பர் 13 வரை ஒத்திவைப்பு!
முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மனம்பேரி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பிரதான 5 வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்: சுகாதார அமைச்சர் கடிதங்களை வழங்கினார்
நாட்டின் பிரதான ஐந்து வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




