சுவிஸ்: 6°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள்!

VIGNESWARAN ABIRAMY•22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள்!

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது.

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில், கொழும்பு மேல்நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் பிரதிவாதிகள் மீது சதி செய்தல் மற்றும் தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

நீதிமன்ற விசாரணைகளின் முடிவில், வழக்கில் சம்பந்தப்பட்ட மொத்தம் 24 பேரில் 15 பேர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மீதமுள்ள 9 பேரும் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக நீதிமன்றம் சற்று நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், சிறிது நேரத்தில் மீண்டும் கூடவுள்ளது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

அரசாங்கத்தின் மக்கள் விரோத போக்கிற்கு எதிராக வெள்ளிக்கிழமை கொழும்பில் பிரம்மாண்ட போராட்டம்: பிரியந்த பத்பேரிய அறிவிப்பு!

அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகள், அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பொருளாதாரச் சீரழிவுகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை கொழும்பில் அனைத்து சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பிரம்மாண்ட போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் செயலாளரும் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான பிரியந்த பத்பேரிய தெரிவித்தார்.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

புசல்லாவ தொரகல பகுதியில் சோகம்: பெண் வெட்டிக்கொலை; வாலிபர் தூக்கில் சடலமாக மீட்பு!

புசல்லாவ பொலிஸ் பிரிவில் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆழ்கடலில் பரபரப்பு: போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகு சுற்றிவளைப்பு!

ஆழ்கடல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

போதைப்பொருள் குற்றங்களில் 208 பொலிஸார் கைது, 1,500 அதிகாரிகள் சஸ்பெண்ட்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அதிரடித் தகவல்!

போதைப்பொருள் தடுப்பு மற்றும் பொலிஸ் துறைக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm