சுவிஸ்: 6°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

கொழும்பு நகரில் நாளை முதல் 'மெட்ரோ பஸ்' சேவை விரிவாக்கம்: 121 பஸ்களுடன் புதிய திட்டம் துவக்கம்!

VIGNESWARAN ABIRAMY•28 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
கொழும்பு நகரில் நாளை முதல் 'மெட்ரோ பஸ்' சேவை விரிவாக்கம்: 121 பஸ்களுடன் புதிய திட்டம் துவக்கம்!

கொழும்பு நகரில் நாளை முதல் 'மெட்ரோ பஸ்' சேவை விரிவாக்கம்: 121 பஸ்களுடன் புதிய திட்டம் துவக்கம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் பொதுப் போக்குவரத்துச் சேவையை அதிநவீனப்படுத்தி மேம்படுத்தும் நோக்கில், Metro Bus சேவையை நாளை (29) முதல் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் முன்னெடுக்கப்படும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 121 பஸ்கள் இந்தச் சேவையில் இணைக்கப்படவுள்ளதாக, போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் சேவை மேம்பாடு குறித்தான விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு மக்களை அதிகளவில் ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இதுகுறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:

குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கும் சேவை, அனைத்து இடங்களிலும் நிறுத்தப்படாமல் முக்கிய நிறுத்தங்களில் மட்டும் நிற்கும் வசதி, சட்டத்தை மதிக்கக்கூடிய பயிற்சி பெற்ற சாரதிகள் மற்றும் நடத்துநர்களைக் கொண்டு இந்தச் சேவை முறைப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை பொலிஸாரால் பஸ்களுக்கான 'முன்னுரிமை ஒழுங்கை'முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களால் அதனைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. தற்போது அறிமுகமாகும் மெட்ரோ பஸ் சேவை அதற்கு மிகவும் பொருத்தமான சூழலை உருவாக்கியுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, வீதியிலுள்ள மூன்று வழிகளில் ஒரு வழி பஸ்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்படும்.

காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை (ஒரு திசையில்)

பிற்பகல் 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை (மறு திசையில்)

இந்த முறைமை மூலம் பொதுமக்கள் எவ்வித தாமதமுமின்றித் தங்களது பயணங்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

மத்திய மாகாணத்தில் 'தூதர்களுடன் ஒரு மாலை' கூட்டம்: சுற்றுலா, விவசாயத் துறை வளர்ச்சிக்கு புதிய திட்டம்!

தென்கிழக்கு ஆசியா நாட்திய மாகாணத்தில் சுற்றுலா, விவசாயம் மற்றும் சிறு வணிகத் துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதையும், மாகாணத்தில் உள்ள தொழில்முனைவோருக்கான சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ‘தூதர்களுடன் ஒரு மாலை’ என்ற தூதரகக் கூட்டத்தின் தொடக்க அமர்வு, (30) அன்று மத்திய மாகாண சபை அரங்கில் நடைபெற்றது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

எந்தவொரு நாட்டுத் தலைவரும் வரி செலுத்தாத வகையில், தற்போதைய நாட்டுத் தலைவர் மக்கள் மீது வரிகளைச் சுமத்தி பெருமிதம் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

உலகிலேயே சிகரெட் விலை மிக அதிகம் உள்ள நாடு இலங்கை! - ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் ஆய்வில் அதிர்ச்சி!

மக்களின் கொள்வனவு திறன் சமநிலை அடிப்படையில் கணக்கிடும்போது, உலகிலேயே மிக அதிக விலையுயர்ந்த சிகரெட்டுகள் இலங்கையிலேயே விற்பனை செய்யப்படுவதாக ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் புதிய மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பல்லேகலை தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: தப்பிச் செல்ல முயன்ற கைதி பலி!

கண்டி - கலகெதர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm