சுவிஸ்: 11°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

பிற்பகலுக்குப் பின் கனமழை எச்சரிக்கை!

VIGNESWARAN ABIRAMY•19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பிற்பகலுக்குப் பின் கனமழை எச்சரிக்கை!

பிற்பகலுக்குப் பின் கனமழை எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், பொலன்னறுவ, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அத்துடன், மேல் மாகாணத்திலும் காலி மாவட்டக் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், ஆபத்துகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை, மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

மீனவர்களுக்கு எச்சரிக்கை! தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வட சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் நிலவிய வளிமண்டலக் கீழடுக்கில் ஏற்பட்ட சுழற்சி, இன்று முற்பகல் 11.30 மணியளவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நவம்பர் 2இல் நாடளாவிய விசேட திட்டம்! மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்குப் பெண் எம்பிக்கள் சங்கம் அழைப்பு!

இலங்கைப் பெண்களிடையே மிகவும் அதிகமாகப் பதிவாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவது மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே கட்டியெழுப்புவதற்காக எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி நாடளாவிய ரீதியில் விசேட தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாளை முடங்கும் அரச பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள்? விரிவுரையாளர்கள் அதிரடி முடிவு!

நாட்டின் அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பு எதிர்கொள்ளும் தீவிர சவால்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் (FUTA) ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை: ரகித ராஜபக்ஷவின் கணக்குகளை முடக்க உத்தரவு!

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) நடவடிக்கை எடுத்துள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm