நவம்பர் 2இல் நாடளாவிய விசேட திட்டம்! மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்குப் பெண் எம்பிக்கள் சங்கம் அழைப்பு!

நவம்பர் 2இல் நாடளாவிய விசேட திட்டம்! மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்குப் பெண் எம்பிக்கள் சங்கம் அழைப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கைப் பெண்களிடையே மிகவும் அதிகமாகப் பதிவாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவது மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே கட்டியெழுப்புவதற்காக எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி நாடளாவிய ரீதியில் விசேட தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர்களின் கூட்டுக் தலைமையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.அத்துடன், எதிர்வரும் ஆண்டில் 35 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண்களையும் புற்றுநோய் பரிசோதனைகளுக்கு உட்படுத்தும் விரிவான வேலைத்திட்டமும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் மகளிர் அமைப்புகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் உயிர்களைப் பாதுகாக்க முடியும் என்பதால், பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள் இந்த தேசிய விழிப்புணர்வுத் திட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
மீனவர்களுக்கு எச்சரிக்கை! தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வட சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் நிலவிய வளிமண்டலக் கீழடுக்கில் ஏற்பட்ட சுழற்சி, இன்று முற்பகல் 11.30 மணியளவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை முடங்கும் அரச பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள்? விரிவுரையாளர்கள் அதிரடி முடிவு!
நாட்டின் அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பு எதிர்கொள்ளும் தீவிர சவால்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் (FUTA) ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை: ரகித ராஜபக்ஷவின் கணக்குகளை முடக்க உத்தரவு!
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டத்தை மீறும் பொலிஸாருக்குக் கடுமையான தண்டனை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் எச்சரிக்கை!
சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொள்ளும் எந்தவொரு பொலிஸ் அதிகாரியையும் பாதுகாக்கப் பொலிஸ் திணைக்களம் ஒருபோதும் செயற்படாது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் அறுதியிட்டுத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




