முல்லைத்தீவு, மன்னாரில் 2027-இல் தகவல் தொழில்நுட்ப வளநிலையங்கள்: பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி!

முல்லைத்தீவு, மன்னாரில் 2027-இல் தகவல் தொழில்நுட்ப வளநிலையங்கள்: பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
முல்லைத்தீவு மற்றும் மன்னார் கல்வி வலயங்களில் தகவல் தொழில்நுட்ப வளநிலையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வினா நேரத்தின்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பெரும்பாலான கணினிகள் மற்றும் பல்லூடக எறிவைகள் (Multimedia Projectors) செயலிழந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டமை நியாயமானது எனத் தெரிவித்த பிரதமர், 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல பகுதிகளுக்குப் புதிய உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
இதனை நிவர்த்தி செய்யும் வகையில், கல்வித் துறைக்காக அரசாங்கம் தயாரித்து வரும் ஐந்தாண்டுச் செயற்றிட்டம் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் கீழ் பழுதடைந்த உபகரணங்களைப் பழுதுபார்த்தல், புதிய உபகரணங்களை வழங்குதல் மற்றும் முல்லைத்தீவு, மன்னாரில் புதிய ஐ.டி. வளநிலையங்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்தார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கையில் ஏற்பட்ட திடீர் மின் தடை: விசாரணை அறிக்கையைப் பெற்றது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!
ஒக்டோபர் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடையுடன் தொடர்புடைய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் (National System Operator – NSO), இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது.
'Ornab' புயலின் தாக்கம்: இலங்கையில் 18 மாவட்டங்கள் பாதிப்பு — DMC எச்சரிக்கை!
சீரற்ற வானிலை மற்றும் Ornab புயல் காரணமாக நாட்டின் 18 மாவட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
'Ornab' புயலின் தாக்கம்: இலங்கையில் 18 மாவட்டங்கள் பாதிப்பு — DMC எச்சரிக்கை!
சீரற்ற வானிலை மற்றும் Ornab புயல் காரணமாக நாட்டின் 18 மாவட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் 'ரெலோ' தலைவர்கள் முக்கிய சந்திப்பு:
30.10. 2026 காலை 10 மணி அளவில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்த்தானிகர் மாண்புமிகு ஆண்ட்ரூ பற்றிக் அவர்களுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் ரெலோவின் உப தலைவரும் பேச்சாளரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் துணைத் தேசிய அமைப்பாளருமான குருசுவாமி சுரேந்திரன் அவர்களும் சந்தித்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.


