காவன்திஸ்ஸ யானை மீதான துப்பாக்கிச் சூடு: 2 சந்தேகநபர்களும் 28 வரை விளக்கமறியல்!

காவன்திஸ்ஸ யானை மீதான துப்பாக்கிச் சூடு: 2 சந்தேகநபர்களும் 28 வரை விளக்கமறியல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பிரபலமான காவந்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பிரதான சந்தேகநபர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று பிற்பகல் மஹவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் அநுராதா செனவிரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
யானை மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை: ரகித ராஜபக்ஷவின் கணக்குகளை முடக்க உத்தரவு!
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டத்தை மீறும் பொலிஸாருக்குக் கடுமையான தண்டனை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் எச்சரிக்கை!
சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொள்ளும் எந்தவொரு பொலிஸ் அதிகாரியையும் பாதுகாக்கப் பொலிஸ் திணைக்களம் ஒருபோதும் செயற்படாது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் அறுதியிட்டுத் தெரிவித்துள்ளார்.
இயற்கை இடர்பாடுகளிலிருந்து தேயிலைத் தோட்டங்களைப் பாதுகாக்க புதிய காப்பீடு!
இலங்கைத் தேயிலைச் சாகுபடி மற்றும் தேயிலைக் கன்று வளர்ப்பைப் பாதுகாக்கும் வகையில் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையினால் புதிய சிறப்பு காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - டில்வின் சில்வா இடையே சந்திப்பு: இருதரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடல்!
இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவைச் சந்திக் கலந்துரையாடியுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




