லலித் - குகன் வழக்கு: கொழும்பு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர், சாட்சியம் பதிவு!

லலித் - குகன் வழக்கு: கொழும்பு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர், சாட்சியம் பதிவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டனர். இச்சம்பவம் நடந்த காலகட்டத்தில் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவிடம் சாட்சியத்தைப் பதிவு செய்வதற்காக நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.
இதனையடுத்து பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜரான அவரிடம், வழக்கின் விசாரணைகளுக்காக வாக்குமூலம் பெறப்பட்டுச் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
மத்திய மாகாணத்தில் 'தூதர்களுடன் ஒரு மாலை' கூட்டம்: சுற்றுலா, விவசாயத் துறை வளர்ச்சிக்கு புதிய திட்டம்!
தென்கிழக்கு ஆசியா நாட்திய மாகாணத்தில் சுற்றுலா, விவசாயம் மற்றும் சிறு வணிகத் துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதையும், மாகாணத்தில் உள்ள தொழில்முனைவோருக்கான சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ‘தூதர்களுடன் ஒரு மாலை’ என்ற தூதரகக் கூட்டத்தின் தொடக்க அமர்வு, (30) அன்று மத்திய மாகாண சபை அரங்கில் நடைபெற்றது.
எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!
எந்தவொரு நாட்டுத் தலைவரும் வரி செலுத்தாத வகையில், தற்போதைய நாட்டுத் தலைவர் மக்கள் மீது வரிகளைச் சுமத்தி பெருமிதம் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே சிகரெட் விலை மிக அதிகம் உள்ள நாடு இலங்கை! - ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் ஆய்வில் அதிர்ச்சி!
மக்களின் கொள்வனவு திறன் சமநிலை அடிப்படையில் கணக்கிடும்போது, உலகிலேயே மிக அதிக விலையுயர்ந்த சிகரெட்டுகள் இலங்கையிலேயே விற்பனை செய்யப்படுவதாக ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் புதிய மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பல்லேகலை தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: தப்பிச் செல்ல முயன்ற கைதி பலி!
கண்டி - கலகெதர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




