
மண்சரிவு அபாயம்: பல மாவட்டங்களுக்கு NBRO எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
தொடர்ந்து நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, நாட்டின் பல மாவட்டங்களுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) புதிய மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று (07) இரவு 7:00 மணி முதல் நாளை (08) இரவு 7:00 மணி வரையிலான 24 மணித்தியால காலப்பகுதிக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டம் 2 - அவதானமாக இருங்கள் (செம்மஞ்சல்/Amber): பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேசம் மற்றும் கேகாலை மாவட்டத்தின் மாவத்தகம, ருவன்வெல்ல ஆகிய பிரதேசங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டம் 1 - விழிப்புடன் இருங்கள் (மஞ்சள்/Yellow): களுத்துறை (வலல்லாவிட்ட), கண்டி (உடுதும்பரை), கேகாலை (தெஹியோவிட்ட, கேகாலை) மற்றும் இரத்தினபுரி (இரத்தினபுரி, எஹெலியகொடை, அயகம, வெலிகேபொல, குருவிட்ட) ஆகிய பிரதேசங்கள் இ்ப்பட்டியலில் அடங்குகின்றன.
குறிப்பிட்ட பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் சாரதிகளும் அவசர மண்சரிவு நிலைமைகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுவது தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கையில் ஏற்பட்ட திடீர் மின் தடை: விசாரணை அறிக்கையைப் பெற்றது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!
ஒக்டோபர் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடையுடன் தொடர்புடைய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் (National System Operator – NSO), இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது.
'Ornab' புயலின் தாக்கம்: இலங்கையில் 18 மாவட்டங்கள் பாதிப்பு — DMC எச்சரிக்கை!
சீரற்ற வானிலை மற்றும் Ornab புயல் காரணமாக நாட்டின் 18 மாவட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
'Ornab' புயலின் தாக்கம்: இலங்கையில் 18 மாவட்டங்கள் பாதிப்பு — DMC எச்சரிக்கை!
சீரற்ற வானிலை மற்றும் Ornab புயல் காரணமாக நாட்டின் 18 மாவட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் 'ரெலோ' தலைவர்கள் முக்கிய சந்திப்பு:
30.10. 2026 காலை 10 மணி அளவில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்த்தானிகர் மாண்புமிகு ஆண்ட்ரூ பற்றிக் அவர்களுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் ரெலோவின் உப தலைவரும் பேச்சாளரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் துணைத் தேசிய அமைப்பாளருமான குருசுவாமி சுரேந்திரன் அவர்களும் சந்தித்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.


