சிவபாசா அனோஜனின் விடுதலைக்காக அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

சிவபாசா அனோஜனின் விடுதலைக்காக அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவபாசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமாஞ்ஞ மற்றும் அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
அதற்கமைய, இலங்கை ராமாஞ்ஞ பீடத்தின் மகாநாயக்க அக்கமகா பண்டித அதிவணக்கத்திற்குரிய மகுலேவ விமல நாயக்க தேரர் மற்றும் அமரபுர பீடத்தின் மகாநாயக்க கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி மகா நாயக்க தேரர் ஆகியோரால் அனுப்பப்பட்டுள்ள குறித்த மகஜர், தென்னிலங்கை பிரதான சங்கநாயக்க கலாநிதி வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரரினால் கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமேக விடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இதுதவிர, இந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்து குருமார் சங்கத்தின் தலைவரும், அகில இலங்கை இந்து கலாசார சபையின் தலைவருமான கலாநிதி சிவாஸ்ரீ கே.வி.கே. வைத்தீஸ்வர குருக்களினாலும் அண்மையில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
வணக்கத்திற்குரிய பாகொட சந்தவங்சி தேரர், வணக்கத்திற்குரிய வேபலே தம்மசிறி தேரர், இந்து குருமார் சங்கத்தின் உறுப்பினர் சிவாஸ்ரீ குகதாச குருக்கள், சட்டத்தரணி தனுஜா நவரத்ன மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஆர்.ஏ. அமில சஞ்சீவ உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கையின் வரி நிலுவை 2.1 டிரில்லியனாக அதிகரிப்பு: IMF வெளிப்படுத்தல்!
இலங்கையின் வரி நிலுவைத்தொகை பாரியளவில் அதிகரித்து, தோராயமாக 2.1 டிரில்லியன் ரூபாவை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள புதிய தொழில்நுட்ப உதவி அறிக்கை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அர்னாப் புயல் பேரழிவு: 5,800 குடும்பங்கள் பாதிப்பு – மீட்புப் பணிகள் தீவிரமடைவு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் 'அர்னாப்' புயல் தாக்கம் காரணமாக இதுவரையில் 5,800-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 356 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் குறிப்பிட்ட முக்கிய சேவைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு!
இலங்கையில் குறிப்பிட்ட சில செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு, செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான TIN (Taxpayer Identification Number) சமர்ப்பிப்பது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
59.6 மில்லியன் ரூபாய் நிதி மோசடி – கொழும்பில் தனியார் நிறுவன ஊழியர் கைது!
இலங்கையில் 59.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 30 வயதுடைய தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




