இலங்கையில் ஓராண்டுக்கு முன் மாயமான இளைஞர் கொலை – திடுக்கிடும் தகவல்கள் வெளியீடு!

இலங்கையில் ஓராண்டுக்கு முன் மாயமான இளைஞர் கொலை – திடுக்கிடும் தகவல்கள் வெளியீடு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வெல்லம்பிட்டிய பகுதியில் காணாமல் போன 24 வயது இளைஞர் ஒருவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி, பாதிக்கப்பட்ட நபர் கிரேண்ட்பாஸில் உள்ள வாகன பழுதுபார்க்கும் பட்டறை ஒன்றில் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டு, எஞ்சிய மனித எச்சங்கள் களனி ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் காணாமல் போனது குறித்து 2025 ஒக்டோபர் 14 அன்று கிரேண்ட்பாஸ் பொலிஸாருக்குத தகவல் தெரிவிக்கப்பட்டது.2025 ஒக்டோபர் 11 அன்று, கம்பிகோடுவாவத்தையில் உள்ள வாகன பழுதுபார்க்கும் பட்டறை ஒன்றில் அவர் சில நபர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
அவர் காணாமல் போனதைத் தொடர்ந்து, அவருடன் இருந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.2026 ஒக்டோபர் 30-அன்று, கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் மபோல மற்றும் மஹர ஆகிய இடங்களில் இரு சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், உஸ்வெட்டகெய்யாவவில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
CHOGM மாநாட்டில் பங்கேற்க இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய அன்டிகுவா சென்றடைந்தார்!
2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) இலங்கையின் சார்பில் பங்கேற்பதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (02) அன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டின் வி.சி. பேர்ட் சர்வதேச விமான நிலையத்தை அடைகின்றார்.
தீவிரப் புயலானது 'முரசு' சூறாவளி: வட கடற்பரப்பில் சிவப்பு எச்சரிக்கை அமல்!
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'முரசு' சூறாவளியானது மேலும் தீவிரமடைந்து வருவதை அடுத்து, இலங்கையின் வடக்கேயான ஆழ்கடல் மற்றும் கடற்பரப்புப் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco), எரிபொருள் விலைகளை மாற்றியமைப்பதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விலைகள் நேற்று (01) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
• சுகாதார சேவையை வலுப்படுத்த அரசாங்கம் அதிரடி நடவடிக்கை – 2,819 புதிய தாதியர்கள் இன்று நியமனம்!
நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்க பொது மருத்துவமனைகளில் நிலவி வரும் தாதியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக, புதிய தாதியர்கள் பெரும் எண்ணிக்கையில் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




