சுவிஸ்: 6°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அக்டோபர் 20 இல் ஆரம்பம்: நாடாளுமன்றச் செயலகம் அறிவிப்பு!

VIGNESWARAN ABIRAMY•16 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அக்டோபர் 20 இல் ஆரம்பம்: நாடாளுமன்றச் செயலகம் அறிவிப்பு!

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அக்டோபர் 20 இல் ஆரம்பம்: நாடாளுமன்றச் செயலகம் அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் எதிர்வரும் அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவுக் (கட்சித் தலைவர்கள்) கூட்டத்தின் போதே இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.


இதன்படி, குறித்த நாட்களுக்கான நாடாளுமன்ற அமர்வுகளின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள சட்டமூலங்கள், அவசரப் பிரேரணைகள் மற்றும் வாய்மொழி மூல வினாக்களுக்கான நேர ஒதுக்கீடுகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது.


குறித்த நான்கு நாட்களும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஆபிரிக்கா வர்த்தக விருது – 2026: இலங்கையர் ராஜமாணிக்கம் சத்தியமூர்த்திக்குச் சர்வதேச அங்கீகாரம்!

இலங்கையின் நுவரெலியா மாவட்டம், பூண்டுலோயாவைச் சேர்ந்த ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தி, 2026 ஆம் ஆண்டுக்கான ஆபிரிக்கா வர்த்தக மன்றம் மற்றும் விருதுகள் நிகழ்வில் (Africa Business Forum and Awards 2026), “சிறந்த வர்த்தகத் தலைவர் – ஆடை மற்றும் ஆடை உற்பத்தித் துறை” (Best Business Leader – Textile and Garment Manufacturing) என்ற விருதைப் பெற்றுக்கொண்டார்.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மீனவர்களுக்கு எச்சரிக்கை! தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வட சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் நிலவிய வளிமண்டலக் கீழடுக்கில் ஏற்பட்ட சுழற்சி, இன்று முற்பகல் 11.30 மணியளவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நவம்பர் 2இல் நாடளாவிய விசேட திட்டம்! மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்குப் பெண் எம்பிக்கள் சங்கம் அழைப்பு!

இலங்கைப் பெண்களிடையே மிகவும் அதிகமாகப் பதிவாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவது மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே கட்டியெழுப்புவதற்காக எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி நாடளாவிய ரீதியில் விசேட தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாளை முடங்கும் அரச பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள்? விரிவுரையாளர்கள் அதிரடி முடிவு!

நாட்டின் அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பு எதிர்கொள்ளும் தீவிர சவால்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் (FUTA) ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm