
கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்துக்கான ட்ரோன் நாட்டை வந்தடைந்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை (CAASL) தெரிவித்துள்ளது.
இந்த ட்ரோனின் முதலாவது சோதனைப் பறப்பை 2026 ஒக்டோபர் மாத இறுதிக்குள் கொழும்பு துறைமுக நகரில் (Colombo Port City) நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்த ட்ரோன், 30 நிமிடங்கள் வரை பறக்கக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில், இலங்கையின் பயணிகள் போக்குவரத்துத் துறையில் புதிய தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஆபிரிக்கா வர்த்தக விருது – 2026: இலங்கையர் ராஜமாணிக்கம் சத்தியமூர்த்திக்குச் சர்வதேச அங்கீகாரம்!
இலங்கையின் நுவரெலியா மாவட்டம், பூண்டுலோயாவைச் சேர்ந்த ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தி, 2026 ஆம் ஆண்டுக்கான ஆபிரிக்கா வர்த்தக மன்றம் மற்றும் விருதுகள் நிகழ்வில் (Africa Business Forum and Awards 2026), “சிறந்த வர்த்தகத் தலைவர் – ஆடை மற்றும் ஆடை உற்பத்தித் துறை” (Best Business Leader – Textile and Garment Manufacturing) என்ற விருதைப் பெற்றுக்கொண்டார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை! தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வட சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் நிலவிய வளிமண்டலக் கீழடுக்கில் ஏற்பட்ட சுழற்சி, இன்று முற்பகல் 11.30 மணியளவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 2இல் நாடளாவிய விசேட திட்டம்! மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்குப் பெண் எம்பிக்கள் சங்கம் அழைப்பு!
இலங்கைப் பெண்களிடையே மிகவும் அதிகமாகப் பதிவாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவது மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே கட்டியெழுப்புவதற்காக எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி நாடளாவிய ரீதியில் விசேட தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை முடங்கும் அரச பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள்? விரிவுரையாளர்கள் அதிரடி முடிவு!
நாட்டின் அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பு எதிர்கொள்ளும் தீவிர சவால்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் (FUTA) ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




