அதிவேக நெடுஞ்சாலையில் ரூ.4,614 மில்லியன் வருமான இழப்பு: தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி!

அதிவேக நெடுஞ்சாலையில் ரூ.4,614 மில்லியன் வருமான இழப்பு: தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த 18.2 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களுக்கு வெளியேறும் நுழைவுச் சீட்டுகள் (Exit Tickets) வழங்கப்படாததால், சுமார் 4,614 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 2019 முதல் ஜூலை 2024 வரையிலான 4 ஆண்டுகள் மற்றும் 9 மாத காலப்பகுதியில் இந்த பெரும் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தணிக்கை அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்தக் காலப்பகுதியில் 133.8 மில்லியனுக்கும் அதிகமான நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருமானம் ஈட்டப்பட்டிருந்த போதிலும், 18.2 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் வெளியேறும் போது சீட்டுகள் முறையாக வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைப் போக்குவரத்து மூலம் கிடைக்க வேண்டிய வருமானத்தில் தினமும் 1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை இழக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை மேலும் கவலை வெளியிட்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
பாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்: தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டிற்கான பிரதான வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் மேலதிக வாக்காளர் பட்டியல்களுக்கு அமைய, தேர்தல் தொகுதிகளுக்கான வாக்காளர் எண்ணிக்கையையும், மாவட்ட ரீதியிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
களனிப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தீ விபத்து : உடமைகள் நாசம்!
களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி அறையொன்றில் இன்று முற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பத் மனம்பேரி வழக்கு: தீர்ப்பு அறிவிப்பு நவம்பர் 13 வரை ஒத்திவைப்பு!
முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மனம்பேரி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பிரதான 5 வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்: சுகாதார அமைச்சர் கடிதங்களை வழங்கினார்
நாட்டின் பிரதான ஐந்து வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




