சுவிஸ்: 7°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

அதிக விலைக்குப் போத்தல் குடிநீர் விற்பனை: எல்ல உணவகத்திற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம்!

VIGNESWARAN ABIRAMY•24 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
அதிக விலைக்குப் போத்தல் குடிநீர் விற்பனை: எல்ல உணவகத்திற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம்!

அதிக விலைக்குப் போத்தல் குடிநீர் விற்பனை: எல்ல உணவகத்திற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலான விலைக்குப் போத்தல் குடிநீரை விற்பனை செய்த குற்றத்திற்காக, எல்ல பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் ஒரு மில்லியன் (10 இலட்சம்) ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

எல்ல, புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள குறித்த உணவகத்தில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, 2025 ஏப்ரல் மாதம் அமுலிலிருந்த வர்த்தமானி அறிவித்தலின் படி 100 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த 1 லீட்டர் போத்தல் குடிநீரை, 200 ரூபாய்க்கு விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு நேற்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதி நிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதனைத் தொடர்ந்து நீதவான் இந்த அதிரடி அபராதத் தீர்ப்பை வழங்கினார்.

இவ்வழக்கில் குறிப்பிடப்பட்ட 100 ரூபாய் என்பது பழைய விலை எனக் குறிப்பிட்டுள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை, 2026 ஜூன் 10 ஆம் திகதியிட்ட புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி தற்போது அமுலிலுள்ள அதிகபட்ச சில்லறை விலைப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது:

500 மி.லீ - 999 மி.லீ: ரூ. 80

1 லீட்டர் - 1.499 லீட்டர்: ரூ. 120

1.5 லீட்டர் - 1.999 லீட்டர்: ரூ. 150

2 லீட்டர் - 2.499 லீட்டர்: ரூ. 180

5 லீட்டர் - 6.999 லீட்டர்: ரூ. 400

(இதற்கமைய, தற்போதைய நிலவரப்படி 1 லீட்டர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச விலை 120 ரூபாயாகும்).

சுற்றுலாப் பகுதிகளிலோ அல்லது உணவகங்களிலோ வியாபாரம் செய்கிறோம் என்ற காரணத்தைக் கூறி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகத் தொகையை அறவிடுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என அதிகாரசபை எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் போத்தல் குடிநீரைக் கொள்வனவு செய்யும்போது தற்போதைய கட்டுப்பாட்டு விலையைச் சரிபார்த்து வாங்குமாறும், ரசீதுகளைப் (Receipts) பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக 1977 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு புகார்களைப் பதிவு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

பாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்: தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டிற்கான பிரதான வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் மேலதிக வாக்காளர் பட்டியல்களுக்கு அமைய, தேர்தல் தொகுதிகளுக்கான வாக்காளர் எண்ணிக்கையையும், மாவட்ட ரீதியிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

3 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

களனிப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தீ விபத்து : உடமைகள் நாசம்!

களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி அறையொன்றில் இன்று முற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

3 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சம்பத் மனம்பேரி வழக்கு: தீர்ப்பு அறிவிப்பு நவம்பர் 13 வரை ஒத்திவைப்பு!

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மனம்பேரி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

3 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரதான 5 வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்: சுகாதார அமைச்சர் கடிதங்களை வழங்கினார்

நாட்டின் பிரதான ஐந்து வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

3 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm