
முல்லைத்தீவில் அதிர்ச்சி: உறங்கிக் கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக் கொலை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில், இன்று (24) அதிகாலை 2 மணியளவில் வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் இனந்தெரியாத நபர்களால் கொடூரமாக அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டில் தந்தை, தாய் மற்றும் மகள் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், அத்துமீறி நுழைந்த நபர்கள் பெற்றாரின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர். மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அயலவர்கள், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இக்கொலையைச் செய்த நபர்கள் யார்? பின்னணி என்ன? என்பது தொடர்பில் மாங்குளம் பொலிஸார், தடயவியல் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலங்கள் தற்போது மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
பாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்: தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டிற்கான பிரதான வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் மேலதிக வாக்காளர் பட்டியல்களுக்கு அமைய, தேர்தல் தொகுதிகளுக்கான வாக்காளர் எண்ணிக்கையையும், மாவட்ட ரீதியிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
களனிப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தீ விபத்து : உடமைகள் நாசம்!
களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி அறையொன்றில் இன்று முற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பத் மனம்பேரி வழக்கு: தீர்ப்பு அறிவிப்பு நவம்பர் 13 வரை ஒத்திவைப்பு!
முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மனம்பேரி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பிரதான 5 வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்: சுகாதார அமைச்சர் கடிதங்களை வழங்கினார்
நாட்டின் பிரதான ஐந்து வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




