சுவிட்சர்லாந்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் – சூரிச்சில் ஐரோப்பிய நிபுணர்கள் ஆலோசனை!
வறட்சி மற்றும் நீர் மாசுபாடு காரணமாக சுவிட்சர்லாந்தின் குடிநீர் விநியோகத்தில் அழுத்தம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க, ஐரோப்பா முழுவதிலுமிருந்து சுமார் 400 நீர்வள நிபுணர்கள் இந்த வாரம் சூரிச்சில் நடைபெறும் சுவிஸ் யூரோவ் நீர் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.












