யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு 80 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிப்பு!

யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு 80 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள உணவு கையாளும் நிலையங்கள், 2026.11.03 பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் திடீர் சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, குறித்த உணவகங்களில் பல்வேறு சுகாதார விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டன. அவற்றுள், எலிகளின் நடமாட்டம் காணப்படும் இடங்களில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தமை.
கழிவுநீரை வெளிச்சூழலில் வெளியேற்றி, காவிகளின் பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கியமை. நச்சுப் பதார்த்தங்கள் உணவுடன் கலப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்ட பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான உணவுப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தியமை.
றெஜிபோம் பெட்டிகளில் சூடான ரொட்டிகளைச் சேமித்து வைத்தமை. போன்ற பாரதூரமான சுகாதார விதிமுறை மீறல்கள் அவதானிக்கப்பட்டன.
இக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ப. தினேஸினால் குறித்த உணவகங்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவ்வழக்குகள் 05 ஆம் திகதி வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தினால் குறித்த உணவகங்களுக்கு ரூ. 80,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
மக்களின் தீர்ப்பை மதித்து யுத்தத்தை நிறுத்த வேண்டும்: அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கருத்து!
அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் பின்னடைவு உலக நாடுகளுக்கு ஒரு நிவாரணமாக அமைந்துள்ளது; மக்களின் தீர்ப்பை மதித்து அவர் உடனடியாக யுத்தத்தை நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டு வேலை மோசடி: தலைமறைவான பெண் பிடிபட்டார்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டு, நீதிமன்றத்திற்குச் சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்த பெண் ஒருவர், 12 பிடியாணைகளின் அடிப்படையில் ராகமப் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்!
ரூ. 3 பில்லியன் போதைப்பொருள் மீட்பு: 5 பேர் கைது!
தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 150 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்றும், 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்!
1.7 லட்சம் விவசாயிகளுக்கு ஓய்வூதியம்: 3,975 தபாலகங்கள் மூலம் விநியோகம்!
நாடளாவிய ரீதியில் 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 975 தபாலகங்கள் ஊடாக மாதாந்தம் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகை ஓய்வூதியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




