
இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கு நெருக்கடி: மருந்துகளுக்கு தட்டுப்பாடு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையின் சுகாதார அமைப்பில் நாளுக்கு நாள் கடுமையான நெருக்கடி நிலை உருவாகி வருவதுடன், இதனால் புற்றுநோயாளிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் சுகாதாரத் துறையில் எழுந்துள்ள பல்வேறு முறைகேடுகள் மற்றும் பற்றாக்குறைகள் குறித்து சுகாதார அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் பலமுறை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டிய போதிலும், அரசாங்கம் இதுவரை எவ்வித சாதகமான முடிவையும் எடுக்கவில்லை.
தற்போது நாட்டில் புற்றுநோய்க்கான சுமார் 40 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. சந்தையில் கிடைக்கும் சில மருந்துகள் முறையான பதிவு இல்லாதவையாக இருப்பதுடன், அவற்றின் விலையும் ஏழை நோயாளிகளால் வாங்க முடியாத அளவுக்கு மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவும் தெரிவித்தார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
மக்களின் தீர்ப்பை மதித்து யுத்தத்தை நிறுத்த வேண்டும்: அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கருத்து!
அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் பின்னடைவு உலக நாடுகளுக்கு ஒரு நிவாரணமாக அமைந்துள்ளது; மக்களின் தீர்ப்பை மதித்து அவர் உடனடியாக யுத்தத்தை நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு 80 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிப்பு!
யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள உணவு கையாளும் நிலையங்கள், 2026.11.03 பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் திடீர் சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
வெளிநாட்டு வேலை மோசடி: தலைமறைவான பெண் பிடிபட்டார்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டு, நீதிமன்றத்திற்குச் சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்த பெண் ஒருவர், 12 பிடியாணைகளின் அடிப்படையில் ராகமப் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்!
ரூ. 3 பில்லியன் போதைப்பொருள் மீட்பு: 5 பேர் கைது!
தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 150 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்றும், 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்!
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




