சுவிஸ்: 5°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
ஆரோக்கியம்

சமையலறை துணிகளில் உள்ள எண்ணெய் பிசுக்கு மற்றும் மஞ்சள் கறையை போக்க எளிய வழிகள்!

VIGNESWARAN ABIRAMY•4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சமையலறை துணிகளில் உள்ள எண்ணெய் பிசுக்கு மற்றும் மஞ்சள் கறையை போக்க எளிய வழிகள்!

சமையலறை துணிகளில் உள்ள எண்ணெய் பிசுக்கு மற்றும் மஞ்சள் கறையை போக்க எளிய வழிகள்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சமையலறையில் பயன்படுத்தும் துணிகள் சில நாட்களிலேயே எண்ணெய் பிசுக்கு, மஞ்சள் கறை மற்றும் துர்நாற்றத்தால் பாழாகிவிடும். அவற்றை மீண்டும் பளிச்சென்று புதுசு போல மாற்றுவதற்கு எளிய மற்றும் இயற்கையான சில சூப்பர் டிப்ஸ் இதோ:

1. சூடான நீரில் கொதிக்க வைத்தல்

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற நல்ல கொதிக்க வைக்கவும். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் சலவைத் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

பிசுபிசுப்பான கிச்சன் துணிகளை அதில் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, துணிகள் ஆறியதும் கைகளால் லேசாகத் தேய்த்துக் கழுவினால் அனைத்துக் கரைகளும் எண்ணெய் பிசுக்கும் முழுமையாக நீங்கிவிடும்.


2. எலுமிச்சை மற்றும் வினிகர் மாயம்

ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் அரை கப் வினிகர் மற்றும் இரண்டு எலுமிச்சைப் பழங்களின் சாற்றைப் பிழியவும்.

அழுக்கடைந்த துணிகளை இந்தத் தண்ணீரில் இரவு முழுவதும் (அல்லது குறைந்தது 4-5 மணி நேரம்) ஊற வைக்கவும். எலுமிச்சை மற்றும் வினிகரில் உள்ள அமிலத்தன்மை துணிகளில் உள்ள கறைகளையும் துர்நாற்றத்தையும் எளிதில் அகற்றிவிடும். ஊறிய பிறகு வழக்கமான சோப்பு கொண்டு துவைத்தால் துணிகள் பளிச்சிடும்.


3. சோப்பு மற்றும் பேக்கிங் சோடா கலவை

கறைகள் அதிகமாக உள்ள இடங்களில் சிறிதளவு பேக்கிங் சோடாவைத் தூவி, அதன் மேல் எலுமிச்சைச் சாறு அல்லது லிக்யூப் சோப்பு ஊற்றிக் கொள்ளவும்.

 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பிரஷ் கொண்டு லேசாகத் தேய்க்கவும். பின்பு சுடுநீரில் அலசினால் கடினமான கரைகளும் காணாமல் போய்விடும்.

சமையலறையில் பயன்படுத்தும் துணிகளைச் சுத்தமாகப் பராமரிப்பது என்பது நம் வீட்டின் ஆரோக்கியத்திற்கும் சுகாதாரத்திற்கும் மிக முக்கியமானதாகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள எளிய இயற்கை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், விலையுயர்ந்த ரசாயனப் பொருட்களைத் தவிர்க்கலாம்; மேலும், கிச்சன் துணிகளில் உள்ள எண்ணெய் பிசுக்களையும் கறைகளையும் எளிதில் நீக்கி நீண்ட நாட்களுக்குப் புதியவை போலப் பராமரிக்க முடியும்.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உடல் நலம் சரியில்லாத போது என்ன சாப்பிட வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!

உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் ஏற்படும் போது செரிமானத்திற்கு எளிதான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். இளநீர், மோர், அரிசி கஞ்சி மற்றும் மிளகு சேர்த்த சூடான ரசம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது விரைவாகக் குணமடைய உதவும்.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆட்டுக்கறி சுக்கா: நாவில் கரையும் சுவையில் வீட்டிலேயே செய்வது எப்படி?

நாவில் எச்சில் ஊறும் மணமும், காரசாரமான சுவையும் கொண்ட 'ஆட்டுக்கறி சுக்கா'வை எவ்வாறு மிகச் சுவையாக வீட்டில் தயாரிப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

தூங்கும்போது நம் மூளையில் நடக்கும் மாயாஜாலம்! கனவுகள் பற்றிய அதிர்ச்சி தரும் உண்மைகள்

இரவு தூங்கச் சென்றவுடன் நம் கண்களுக்குள் விரியும் வண்ணமயமான உலகம்தான் கனவு. பல நூற்றாண்டுகளாக மனிதனை ஈர்த்தும், குழப்பியும் வரும் இந்த கனவுகள் பற்றிய சிலிர்க்க வைக்கும் உண்மைகளை அறிவியல் வெளிச்சத்தில் பார்ப்போம் வாருங்கள்!

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்கள்... எந்த நேரத்தில் சாப்பிட்டால் என்ன நன்மைகள்?

"ஆப்பிள் ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை" என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த பழமொழி. ஆனால், அந்தப் பழங்களை நாம் எப்போது சாப்பிட வேண்டும் என்பதில் தான் அதன் முழுமையான ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். பழங்களை நாம் உட்கொள்ளும் முறையும் நேரமும் நமது உடல்நலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm