22ஆவது திருத்தம் மூலம் ஒரு கட்சி ஆட்சியை உருவாக்க அரசு முயற்சி: சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

22ஆவது திருத்தம் மூலம் ஒரு கட்சி ஆட்சியை உருவாக்க அரசு முயற்சி: சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஒரு கட்சி நாட்டை உருவாக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இலங்கையில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஒரு கட்சி நாட்டை உருவாக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான கால அட்டவணையை அரசாங்கம் தயாரித்துள்ளது. ஆனால் இந்த திருத்தமானது நீதித்துறை சுயாதீனத்தின் மீதான மரண அடியாகும்.
நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும், மக்களின் மனித உரிமைகளை மீறும் மிகவும் கடுமையான ஜனநாயக விரோத செயற்பாடாகவே இது இருக்கின்றது. இந்தத் திருத்தத்தின் ஊடாக மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது. என்றும் தெரிவித்தார் .
நிவேதினி
செய்தியாளர்அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
மக்களின் தீர்ப்பை மதித்து யுத்தத்தை நிறுத்த வேண்டும்: அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கருத்து!
அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் பின்னடைவு உலக நாடுகளுக்கு ஒரு நிவாரணமாக அமைந்துள்ளது; மக்களின் தீர்ப்பை மதித்து அவர் உடனடியாக யுத்தத்தை நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு 80 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிப்பு!
யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள உணவு கையாளும் நிலையங்கள், 2026.11.03 பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் திடீர் சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
வெளிநாட்டு வேலை மோசடி: தலைமறைவான பெண் பிடிபட்டார்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டு, நீதிமன்றத்திற்குச் சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்த பெண் ஒருவர், 12 பிடியாணைகளின் அடிப்படையில் ராகமப் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்!
ரூ. 3 பில்லியன் போதைப்பொருள் மீட்பு: 5 பேர் கைது!
தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 150 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்றும், 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்!
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




