
அவசர உதவிகளுக்கு இலங்கை பொலிஸின் ‘119 மொபைல் செயலி’ அறிமுகம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையில் அவசர காலங்களில் பொதுமக்கள் மிக விரைவாக காவல்துறையின் உதவியை நாடுவதற்காக ‘Sri Lanka Police 119’ மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விபத்துக்கள் அல்லது ஆபத்தான சூழ்நிலைகளில் 119 பிரிவுக்கு அழைத்து பேச முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அவசர காலங்களில் பொதுமக்கள் மிக விரைவாக காவல்துறையின் உதவியை நாடுவதற்காக ‘Sri Lanka Police 119’ மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விபத்துக்கள் அல்லது ஆபத்தான சூழ்நிலைகளில் 119 பிரிவுக்கு அழைத்து பேச முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் ஆபத்தில் இருக்கும்போது இந்த செயலியைப் பயன்படுத்தினால், அவர்களது ‘Live GPS’ இருப்பிடம் தானாகவே கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும். தமிழ் பேசும் மக்கள் தங்களின் புகார்களை புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க இதில் முழுமையான தமிழ் மொழி வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், செவிப்புலன் குறைபாடுடையோருக்காக 011 280 9980 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் சைகை மொழியில் அவசர புகார்களைத் தெரிவிக்கும் விசேட வீடியோ அழைப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.
குரு
செய்தியாளர்அக்கினி செய்திகளின் சிறப்பு கட்டுரையாளர். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
மக்களின் தீர்ப்பை மதித்து யுத்தத்தை நிறுத்த வேண்டும்: அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கருத்து!
அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் பின்னடைவு உலக நாடுகளுக்கு ஒரு நிவாரணமாக அமைந்துள்ளது; மக்களின் தீர்ப்பை மதித்து அவர் உடனடியாக யுத்தத்தை நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு 80 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிப்பு!
யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள உணவு கையாளும் நிலையங்கள், 2026.11.03 பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் திடீர் சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
வெளிநாட்டு வேலை மோசடி: தலைமறைவான பெண் பிடிபட்டார்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டு, நீதிமன்றத்திற்குச் சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்த பெண் ஒருவர், 12 பிடியாணைகளின் அடிப்படையில் ராகமப் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்!
ரூ. 3 பில்லியன் போதைப்பொருள் மீட்பு: 5 பேர் கைது!
தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 150 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்றும், 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்!
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




