சுவிஸ்: 6°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

வடக்கு, கிழக்கில் உணர்வெழுச்சியுடன் தொடங்கிய தியாகத் தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்!

VIGNESWARAN ABIRAMY•16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
வடக்கு, கிழக்கில் உணர்வெழுச்சியுடன் தொடங்கிய தியாகத் தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்!

வடக்கு, கிழக்கில் உணர்வெழுச்சியுடன் தொடங்கிய தியாகத் தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர்நீத்த தியாகத் தீபம் லெப்டினன்ட் கேணல் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உணர்வுபூர்வமாகத் தொடங்கியுள்ளன.

நேற்று (15) காலை 9.45 மணியளவில், திலீபன் தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அதே நேரத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகின. வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் சுற்றாடலில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் பொதுச்சுடர் ஏற்றி, உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும், தமிழர்கள் வாழும் புலம்பெயர் நாடுகளிலும் நினைவேந்தல் சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இன்றிலிருந்து தியாகத் தீபம் திலீபன் ஈகச்சாவடைந்த செப்டம்பர் 26ஆம் திகதி வரையிலான 12 நாட்களுக்குத் தொடர்ச்சியாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

மக்களின் தீர்ப்பை மதித்து யுத்தத்தை நிறுத்த வேண்டும்: அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கருத்து!

அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் பின்னடைவு உலக நாடுகளுக்கு ஒரு நிவாரணமாக அமைந்துள்ளது; மக்களின் தீர்ப்பை மதித்து அவர் உடனடியாக யுத்தத்தை நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு 80 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிப்பு!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள உணவு கையாளும் நிலையங்கள், 2026.11.03 பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் திடீர் சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

வெளிநாட்டு வேலை மோசடி: தலைமறைவான பெண் பிடிபட்டார்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டு, நீதிமன்றத்திற்குச் சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்த பெண் ஒருவர், 12 பிடியாணைகளின் அடிப்படையில் ராகமப் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ரூ. 3 பில்லியன் போதைப்பொருள் மீட்பு: 5 பேர் கைது!

தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 150 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்றும், 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm