சுவிஸ்: 11°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
ஆரோக்கியம்

நாக்குக்கு ருசியான பாரம்பரிய வெங்காய சம்பல் செய்முறை!

குரு•31 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
நாக்குக்கு ருசியான பாரம்பரிய வெங்காய சம்பல் செய்முறை!

நாக்குக்கு ருசியான பாரம்பரிய வெங்காய சம்பல் செய்முறை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு, மிகக் குறுகிய காலத்தில் சுவையாகவும் காரசாரமாகவும் செய்யக்கூடிய வெங்காய சம்பல் செய்முறையை இப்போது பார்ப்போம்!

எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு, மிகக் குறுகிய காலத்தில் சுவையாகவும் காரசாரமாகவும் செய்யக்கூடிய வெங்காய சம்பல் செய்முறையை இப்போது பார்ப்போம்!


தேவையான பொருட்கள்


பெரிய வெங்காயம் - 3 (மெலிதாக நறுக்கியது)

மிளகாய்த்தூள் - 1.5 மேஜைக்கரண்டி

சீனி - 1 முதல் 1.5 மேஜைக்கரண்டி

புளி - சிறிய எலுமிச்சை அளவு 

கறிவேப்பிலை, ரம்பை இலை - சிறிதளவு

ஏலக்காய், கிராம்பு - தலா 2

சிறிய துண்டு இலவங்கப்பட்டை - 1

மாசித் தூள் - 1 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)

எண்ணெய் & உப்பு - தேவையான அளவு


செய்முறை

மெலிதாக நறுக்கிய வெங்காயத்தில் சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் பிசைந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.


 ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை, கறிவேப்பிலை மற்றும் ரம்பை இலை சேர்த்துத் தாளிக்கவும்.


 பிசைந்து வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து மிதமான தீயில் நிறம் பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வதக்க வேண்டும்.


வெங்காயம் சுருங்கி மென்மை ஆனதும், மீதமுள்ள மிளகாய்த்தூள், மாசித் தூள் மற்றும் கெட்டியான புளிச்சாறு சேர்த்து கிளறவும்.


மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் சீனியைச் சேர்க்கவும். சீனி உருகி, வெங்காயத்துடன் சேர்ந்து அடர்ந்த பழுப்பு நிறத்திற்கு வரும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.


இதை எண்ணெய் பிரிந்து, காரமும் இனிப்பும் கலந்த பதம் வந்ததும் இறக்கலாம்.


வெங்காய சம்பல் ஆறியவுடன் ஒரு சுத்தமான, ஈரம் இல்லாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்தால், குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமலே சில நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

இதை பாண் , ரொட்டி, இடியப்பம் அல்லது பால் சோற்றுடன் தொட்டுச் சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்!


குரு

குரு

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் சிறப்பு கட்டுரையாளர். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

வீட்டிலேயே நாவில் ஊறும் மாங்காய் ஊறுகாய் செய்முறை!

நமது பாரம்பரிய உணவு முறையில் உணவுத் தட்டிற்கு கூடுதல் சுவையூட்டும் முக்கியப் பொருளாக ஊறுகாய் விளங்குகிறது. அதில் கோடை காலத்தின் வரவான மாங்காயில் செய்யப்படும் காரசாரமான மாங்காய் ஊறுகாய் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பெண்கள் அவசியம் அறிய வேண்டிய வாழைப்பூவின் அற்புதப் பலன்கள்!

தமிழர்களின் பாரம்பரிய உணவிலும் மருத்துவத்திலும் வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்துவமான மகத்துவம் உண்டு. அதில் குறிப்பாக, நாம் பல நேரங்களில் சமைக்கச் சோம்பல்பட்டு ஒதுக்கும் வாழைப்பூ, உடலுக்கு அளப்பரிய நன்மைகளை அள்ளித் தரும் ஒரு இயற்கை அருமருந்தாகும்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷல்: வீட்டிலேயே சுலபமாகச் செய்யக்கூடிய 5 அசத்தல் பலகாரங்கள்!

தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசுகளும், வாயில் கரையும் சுவையான பலகாரங்களும்தான். கடைகளில் வாங்கும் பலகாரங்களை விட, நம் கைகளால் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செய்யும் பலகாரங்களின் தனிச் சுவையே தனி. இந்த ஆண்டு தீபாவளியைக் கொண்டாட, பாரம்பரியமான மற்றும் நாவில் கரையும் 5 சுவையான பலகாரங்களை மிக எளிமையான முறையில் செய்வது எப்படி என்பதை இங்கே பார்ப்போம்!

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

புரோட்டீன் பவுடர் பயன்பாடு: சிறுநீரகத்தைப் பறிக்கும் ஆபத்து!

உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும், ஜிம்மில் சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்ற ஆர்வம் இன்றைய இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. இதற்காக இயற்கையான உணவுகளைத் தாண்டி, பலரும் தங்களுக்குத் தாங்களே பரிந்துரைத்துக்கொள்ளும் 'புரோட்டீன் பவுடர்' (Protein Powder) மற்றும் சப்ளிமெண்ட்ஸ் மீதான மோகம் ஆபத்தான எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. இது உங்கள் சிறுநீரகங்களுக்குத் தெரியாமல் நீங்கள் வைக்கும் ‘ஸ்லோ பாய்சன்’ (Slow Poison) என்று மருத்துவர்கள் பகீர் எச்சரிக்கை விடுக்கிறார்கள். இதுகுறித்த முழுமையான விவரங்களை இப்போது பார்க்கலாம்.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm