
என்ஜின் பழுதால் இலங்கையில் சிக்கிய 11 மீனவர்கள் விடுவிப்பு குறித்த பிரத்யேக ஒளிப்படம்
என்ஜின் பழுதால் இலங்கையில் கரை ஒதுங்கிய 11 ராமேசுவரம் மீனவர்கள், அபராதத்துடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 11 பேர், படகின் என்ஜின் பழுதானதால் இலங்கை கடற்பகுதிக்குள் சென்று கரை ஒதுங்கினர். இதையடுத்து இலங்கை கடற்படையினர் அவர்களை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம், 11 மீனவர்களுக்கும் அபராதம் விதித்து விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அபராதத் தொகை செலுத்தப்பட்ட நிலையில், அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நீதிமன்றம் விதித்த அபராதத்தை செலுத்தத் தவறினால், 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் விரைவில் தமிழகம் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அக்கினி
ஆசிரியர் குழுஅக்கினி செய்திகள் ஆசிரியர் குழு
தொடர்புடைய செய்திகள் (Related News)
வெளிநாட்டு வேலை மோசடி: தலைமறைவான பெண் பிடிபட்டார்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டு, நீதிமன்றத்திற்குச் சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்த பெண் ஒருவர், 12 பிடியாணைகளின் அடிப்படையில் ராகமப் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்!
ரூ. 3 பில்லியன் போதைப்பொருள் மீட்பு: 5 பேர் கைது!
தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 150 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்றும், 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்!
1.7 லட்சம் விவசாயிகளுக்கு ஓய்வூதியம்: 3,975 தபாலகங்கள் மூலம் விநியோகம்!
நாடளாவிய ரீதியில் 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 975 தபாலகங்கள் ஊடாக மாதாந்தம் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகை ஓய்வூதியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் 2,000க்கும் அதிகமான பஸ்கள் முடக்கம்: பிரதி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிபரம்!
இலங்கை போக்குவரத்துச் சபையில் 7 ஆயிரத்து 130 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவற்றில் 5 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயங்கும் நிலையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது!
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




