
எயார்பஸ் விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு விவகாரத்தில் பணச்சலவைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய, சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவை 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபர் வெளிநாடுகளுக்குப் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த உத்தரவு குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, வழக்கின் சாட்சிகளுக்கு எவ்விதத்திலும் அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் கடுமையான பிணை நிபந்தனையை விதித்துள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உலகிலேயே சிகரெட் விலை மிக அதிகம் உள்ள நாடு இலங்கை! - ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் ஆய்வில் அதிர்ச்சி!
மக்களின் கொள்வனவு திறன் சமநிலை அடிப்படையில் கணக்கிடும்போது, உலகிலேயே மிக அதிக விலையுயர்ந்த சிகரெட்டுகள் இலங்கையிலேயே விற்பனை செய்யப்படுவதாக ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் புதிய மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பல்லேகலை தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: தப்பிச் செல்ல முயன்ற கைதி பலி!
கண்டி - கலகெதர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
நிதி அமைச்சின் அதிரடி நடவடிக்கை: 33 அரசு நிறுவனங்களைக் கலைக்கும் பணிகள் ஆரம்பம்!
தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைக் கலைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது!
கட்டுநாயக்கவில் பரபரப்பு: புகைமூட்டம் காரணமாக ஸ்ரீலங்கன் விமானம் அவசரத் தரையிறக்கம்!
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் திடீரெனப் புகைமூட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று இரவு அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




