சுவிஸ்: 8°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

மத்திய வங்கி பிணைமுறி வழக்கு: பூர்வாங்க விசாரணைக்காக ஜனவரி 28-ல் ஆஜராக உத்தரவு!

VIGNESWARAN ABIRAMY•2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
மத்திய வங்கி பிணைமுறி வழக்கு: பூர்வாங்க விசாரணைக்காக ஜனவரி 28-ல் ஆஜராக உத்தரவு!

மத்திய வங்கி பிணைமுறி வழக்கு: பூர்வாங்க விசாரணைக்காக ஜனவரி 28-ல் ஆஜராக உத்தரவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இலங்கை மத்திய வங்கி பிணைமுறி வழக்கு, பூர்வாங்க விசாரணை மாநாட்டிற்காக வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதிக்கு அழைக்கப்படவுள்ளதாகக் கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரியாந்த லியனகே தலைமையிலான நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பெர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ், ஜெஃப்ரி அலோசியஸ், கசுன் பாலிசேன மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பத்தினிகே சமரசிறி உள்ளிட்ட பல சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். எனினும், வழக்கின் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்படும் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அஜான் கார்திய புஞ்சிஹேவா ஆகியோர் நீதிமன்றத்தில் சமூகமளிக்கவில்லை.

விசாரணையின் போது, சில பிரதிவாதிகள் தரப்புக்குத் தேவையான ஆவணங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனச் சட்டத்தரணிகள் தெரிவித்தனர். இதனைக் கருத்திற்கொண்ட நீதிபதிகள் குழாம், அடுத்த வழக்குத் திகதிக்கு முன்னதாக உரிய ஆவணங்களைப் பிரதிவாதிகளுக்கு வழங்குமாறு சட்டமா அதிபர் தரப்புக்கு உத்தரவிட்டனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற மத்திய வங்கி பிணைமுறி ஏலத்தில் அரசுக்கு 688 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உலகிலேயே சிகரெட் விலை மிக அதிகம் உள்ள நாடு இலங்கை! - ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் ஆய்வில் அதிர்ச்சி!

மக்களின் கொள்வனவு திறன் சமநிலை அடிப்படையில் கணக்கிடும்போது, உலகிலேயே மிக அதிக விலையுயர்ந்த சிகரெட்டுகள் இலங்கையிலேயே விற்பனை செய்யப்படுவதாக ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் புதிய மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பல்லேகலை தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: தப்பிச் செல்ல முயன்ற கைதி பலி!

கண்டி - கலகெதர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நிதி அமைச்சின் அதிரடி நடவடிக்கை: 33 அரசு நிறுவனங்களைக் கலைக்கும் பணிகள் ஆரம்பம்!

தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைக் கலைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது!

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கட்டுநாயக்கவில் பரபரப்பு: புகைமூட்டம் காரணமாக ஸ்ரீலங்கன் விமானம் அவசரத் தரையிறக்கம்!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் திடீரெனப் புகைமூட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று இரவு அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm